வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

15 வயதில் திருமணம், பலான படத்தில் நடிக்க வற்புறுத்திய கணவன்.. விரக்தியில் 17 வயதில் மரணமடைந்த நடிகை

சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்தவர் தான் அந்த நடிகை. 4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் வியக்க வைத்த அவர் 14 வயதிலேயே ஹீரோயின் ஆகவும் பிரமோஷன் பெற்றார். அந்த சிறு வயதிலேயே முகத்தில் பல உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதில் இவர் திறமையானவராக இருந்தார்.

அதுவே இவரை ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகையாக கொண்டு சேர்த்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கதாநாயகிக்கு உரிய அம்சத்துடன் இருந்தவர் கிடையாது. மாநிற ல, ஒல்லியான உடல்வாகும் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் தான் அவர் இருந்தார். இருப்பினும் அவர் இன்று வரை தமிழ் சினிமாவின் சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.

Also read: நடிகரின் அந்தரங்க தொந்தரவால் கும்பிடு போட்ட நடிகை.. மாஸ்டர் பிளான் போட்டு கட்டம் கட்டிய ஹீரோ

அதனாலலேயே அந்த சிறு வயதில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அப்படி படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இந்த நடிகைக்கு 40 வயது இயக்குனரின் மேல் காதல் வந்தது தான் விசித்திரம். இத்தனைக்கும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இருந்தாலும் அவருடைய காதல் வலையில் விழுந்த அந்த நடிகை 15 வயதில் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

அப்போது அவர் தன் நடிப்புக்காக தேசிய விருது வாங்கிய சமயம் திடீரென்று ஒரு நாள் நடிகை தற்கொலை செய்து கொண்டார் என்று வெளிவந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆட்டிப்படைத்தது. இதற்கு விரக்தி, மன அழுத்தம், காதல் தோல்வி என்று பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் நடிகைக்கு நடந்தது பெரும் கொடுமை. அதாவது சிறு பெண் என்றும் பாராமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த இயக்குனர் நடிகையை பலான படத்தில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

Also read: போதைக்கு அடிமையாகி கேரியரை இழக்கும் நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை

இதுதான் பிரச்சனையின் மூல காரணம். அதற்கு நடிகை மறுக்கவே, காதல் கணவரும் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை செய்திருக்கிறார். காதலித்தவர் இப்படிப்பட்டவர் என்ற ஏமாற்றமும் மன அழுத்தமும் தான் நடிகையை 17 வயதிலேயே இப்படி ஒரு முடிவை தேட வைத்தது. இந்த சம்பவம் திரை உலகில் பலருக்கும் தெரிந்தாலும் அப்போது தமிழ்நாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த ஒரு பிரபலத்தினால் அந்த இயக்குனர் தப்பித்து விட்டார்.

ஆனால் நடிகையின் அம்மா தான் இந்த மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று போராடினார். இறுதியில் அவரும் மகள் இறந்த ஒரு சில வருடங்களிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிர் நீத்தார். அதன் பிறகு இந்த விஷயம் சில பெரும் புள்ளிகளால் அப்படியே மறைக்கப்பட்டது. குறுகிய காலங்கள் மட்டுமே வாழ்ந்தாலும் அந்த நடிகை இப்போதும் தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு அடையாளமாக மாறி இருக்கிறார்.

Also read: சொகுசா இருக்க ஆசை, அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன நடிகையின் அம்மா.. டார்ச்சர் தாங்காமல் ஓடிய சம்பவம்

Trending News