செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் டிவிக்கே ஷட்டரா? ரச்சிதாவை கொக்கி போட்டு தூக்கிய பிரபல சேனல்

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் உண்டு. இவர்களை சின்னத்திரை தொடர்கள் மூலமாக வாரம் ஆறு நாட்கள் பார்ப்பதனால் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் போல ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

மற்ற தொலைக்காட்சியில் இருந்து பல பிரபலங்கள் விஜய் டிவியில் வாய்ப்பு தேடுவார்கள். ஏனென்றால் விஜய் டிவிக்கு வந்தால் நாம் எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடலாம் என பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் தற்போது விஜய் டிவியில் உள்ள சீரியல் நடிகை தற்போது வேற ஒரு தொலைக்காட்சியில் நடிக்க உள்ளார்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 2 தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இத்தொடரில் பிக் பாஸ் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற அடுத்த அடுத்த சீசன்களில் மீனாட்சி ஆக நடித்து ரசிகர் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

அதன் பிறகு பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக மகா கதாபாத்திரத்தில் ரச்சிதா நடித்திருந்தார்.

ஒரு சில காரணங்களால் இத்தொடரில் இருந்து ரச்சிதா விலகினார். இது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு தற்போது மகா கதாபாத்திரத்தில் அரண்மனைக்கிளி மோனிஷா நடித்துவருகிறார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கதாநாயகியா ரச்சிதா நடிக்க உள்ளார். இத்தொடர் மார்ச் 7 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இப்போது இத்தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது ரச்சிதாவை மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News