வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

50 வினாடிக்கு 5 கோடி.. அடேங்கப்பா.! நயன் மேடம் பகல் கொல்லையா இருக்கே!

அதிக சம்பளம் வாங்கும் எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்காத ஒன்று இந்த நடிகை க்கு கிடைக்கிறது. 50 வினாடிக்கு 5 கோடி.. யோசித்து பாருங்கள், இந்த தொகை இருந்தால், ஜம்முனு ஒரு வீடு கட்டி, ஒரு தொழிலை ஆரம்பித்து செட்டில் ஆகி விடுவோம். ஆனால் அவருக்கு இந்த தொகையெல்லாம் ஒன்றுமே இல்லை.

இந்த நடிகை டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த விளம்பரத்தில் நடிக்க, அவர் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவரது ஒரு படத்திற்கான கட்டணம் என்று சொல்லப்படுகிறது.

படத்திற்கு கூட இந்த கட்டணம் இல்லை. மாக்ஸிமும் 10 கோடி தான் கொடுக்கிறார்கள். இவர் பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். ரஜினிகாந்த், ஷாருக்கான், ஜெயராம், நாகார்ஜூனா அக்கினேனி உள்ளிட்டோருடன் பணிபுரிந்த இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என்றே சொல்லலாம்.

எல்லாம் Strategy கண்ணா

2018ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ‘பிரபலங்கள் 100’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி பெண் நடிகை தான், இப்படி கட்டுக்கடங்காமல் பணம் சம்பாதிக்கிறார். இந்த நடிகை 20 ஆண்டுகளில் 80 திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஆனால் இவருக்கு ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. CA-வில் பட்டம் பெற்று, வேலைக்கு சென்று ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் நினைத்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை, புகழின் உச்சிக்கு இவரை அழைத்து சென்று விட்டது.

பல ஏற்ற இறக்கங்களை இவர் சந்தித்தாலும் கம் பாக் கொடுக்காமல் இவர் இருந்ததில்லை. அந்த நடிகை வேறு யாரும் இல்லை.. அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். இவர் தான், 50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்று, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையைப் நடிகை நயன்தாரா பெற்றுள்ளார்.

Trending News