ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரச்சனைக்கு பயந்து பம்மிய நடிகை.. சப்பை கட்டு கட்டி பாலா விவகாரத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி

Director Bala: கடந்த சில நாட்களாகவே பாலா பற்றிய சர்ச்சை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வணங்கான் பட ஷூட்டிங்கில் சரியாக நடிக்காததால் தன்னை இயக்குனர் அடித்துவிட்டார் என நடிகை மமிதா கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்த இந்த பிரச்சனையில் பாலா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. எங்கே இந்த விவகாரத்தால் தன்னுடைய பெயர் கெட்டுப் போய் விடுமோ என பயந்து போன மமிதா தற்போது ஒரு விளக்கம் அளித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆனால் அது முழுமையான விளக்கமாகத் தெரியவில்லை ஏதோ சப்பை கட்டு கட்டியது போல் தான் தெரிகிறது. அவர் கூறியிருப்பதாவது, நான் கொடுத்த பேட்டியில் சிறு விஷயத்தை மட்டும் போட்டு பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டார்கள். நான் அப்படி சொல்லவில்லை.

Also read: சக நடிகைகளை அசிங்கப்படுத்திய 5 நடிகர்கள்.. நயன்தாராவை பேசி சூனியம் வைத்து கொண்ட ராதாரவி

பாலாவுடன் நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் பணிபுரிந்து இருக்கிறேன். என்னை அவர் நன்றாக தான் பார்த்துக் கொண்டார். உதவி இயக்குனர்களும் சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள் எனக்கு இயக்குனர் முழு சுதந்திரம் கொடுத்து நடிக்க வைத்தார்.

சூர்யா சார் அந்த படத்தில் இருந்து விலகியதால் இனிமேல் படம் எப்படி தொடங்கும் என்ற எண்ணத்தில் தான் நான் விலகினேன். அது மட்டுமல்லாமல் என்னுடைய கால்ஷீட் தேதிகளும் முடிந்து விட்டது. மீண்டும் ஆறு மாதம் தேதிகள் கொடுக்க முடியாது என்பதால் தான் விலகினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்த சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்துள்ளது. ஆனாலும் பாலா அடித்தார் என்று கூறியதற்கான விளக்கம் மட்டும் இவர் சரியாக கொடுக்கவில்லை. மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் உண்மை என்ன என்று தெரியாமலேயே பொய்யை நம்பி விடுகிறோம். பாலா அண்ணன் படைப்புக்காக போராடக் கூடியவர் என சப்போர்ட் செய்திருக்கிறார்.

Also read: பாலாவிடம் அடிவாங்கிய 6  நடிகைகள்.. அடி வாங்கி தையல் போடப்பட்ட வாரிசு நடிகை..!

Trending News