வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

22 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் நடிகை.. AK62-வில் நயனை நம்பாத விக்னேஷ் சிவன்

ஏகே 62 வில் நடிகர் அஜித்துடன் 22 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை ஒருவர் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா தான் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த பிரபல நடிகை நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அஜித்தின் 62 வது திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தில் காஸ்ட் கட்டிங் என்று சொல்லி நயன்தாராவை நடிக்க வைத்து விட வேண்டும் என்று விக்னேஷ் சிவன் திட்டமிட்ருந்தார்.

Also read : இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த விஜய்.. அஜித் ஆள் அட்ரஸ் காணுமே

கொஞ்சம் பெரிய நடிகரின் படம் என்பதால், விக்னேஷ் அவருடைய காதல் மனைவி நயன்தாராவுக்கு வெயிட்டான கேரக்டர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் அஜித்துடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். ஆனால் அந்த படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. அஜித்திற்கு தபுவும் , ஐஸ்வர்யாவுக்கு மம்மூட்டியும் ஜோடியாக நடித்திருந்தார்.

Also read : இரவு பார்ட்டியில் அஜித் மகள், ஷாலினி.. புகைப்படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்

அந்த படம் நடிக்கும் போது தனக்கு அஜித் என்றால் யாரென்றே தெரியாது என்று ஐஸ்வர்யா கொடுத்த பேட்டி ஒன்று அஜித் ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய வெறுப்பை ஐஸ்வர்யா மீது உருவாக காரணாமாக இருந்தது. மேலும் ஐஸ்வர்யாராயை அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்கவே கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

இப்போது அஜித்தின் 62 வது படத்தில் ஐஸ்வர்யா ராய் அவருடன் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐஸ்வர்யா எந்திரனுக்கு பிறகு நடிக்கும் தமிழ் திரைப்படம் இதுவாக இருக்கும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Also read : அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய், ஆக்ஷனுக்கு லீவு விடும் இளைய தளபதி

Trending News