ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஜோ.. சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சொத்தின் மதிப்பு

Actress Jyothika Net Worth: நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் டாப் நடிகையாக இருக்கிறார். ஜெனி, மாயா, கங்கா, குந்தவை, அர்ச்சனா, வசந்தி, கீதா ராணி என இவர் நடித்த கேரக்டர்கள் அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா ரசிகர்களால் மறந்து விட முடியாது. அஜித், விஜய், ரஜினி, கமல் என அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த பெருமையும் இவருக்குத்தான் சேரும்.

ஒரு நடிகை திருமணத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து விட்டு, மீண்டும் கம் பேக் கொடுக்கும் பொழுது முதல் இடத்தில் இருக்க முடியுமானால் அது ஜோதிகாவுக்கு தான் சாத்தியம். பொதுவாக திருமணமான பல நடிகைகள் கிடைத்த கேரக்டரில் பணத்திற்காக நடித்து விடுவார்கள். ஆனால் ஜோதிகா நான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என பாஸ் லேடியாக சினிமாவை ஆட்சி செய்கிறார்.

Also Read:இதுக்கு தான் மும்பையில செட்டில் ஆனோம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய சூர்யா

சினிமாவில் கிடைத்த புகழ் மற்றும் சொத்து மதிப்பை வைத்து நயன்தாராவை நம்பர் ஒன் நடிகை என்று சொல்கிறார்கள். ஆனால் அவரை விட டபுள் மடங்கு சொத்தோடு இருக்கிறார் ஜோதிகா. தன்னுடைய கணவர் மற்றும் கணவருடைய குடும்பத்தை சாராமல் தனி ஒரு மனைவியாக இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் தான் இது அத்தனையும் என சொல்லப்படுகிறது. முன்னணி ஹீரோயின்களுக்கு நிகராக சம்பளமும் வாங்கி வருகிறார்.

ஜோதிகாவின் சொத்து மதிப்புகள்

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக நடித்து ஜோதிகா சம்பாதித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது கம் பேக் கொடுத்திருக்கும் அவர் ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளமாக வாங்குகிறார். மேலும் தன்னுடைய கணவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2டி தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் வருடத்திற்கு அவருக்கு கோடி கணக்கில் வருமானம் கிடைக்கிறது.

படங்கள் மட்டுமில்லாமல் ஜோதிகா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சென்னையில் மட்டும் அவருக்கு 2000 சதுர அடிக்கு பங்களா இருக்கிறது. மும்பையில் 70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார். மும்பையின் மிகப்பெரிய பள்ளிகூடத்தில் தான் அவருடைய குழந்தைகள் படிக்கிறார்கள். ஜோதிகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 330 கோடி என சொல்லப்படுகிறது.

சொந்தமாக ஜோதிகாவுக்கு பி எம் டபிள்யு, ரேஞ்ச் ரோவர் மற்றும் ஆடி என சொகுசு கார்கள் இருக்கின்றன. இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் நடிகையாக ஜோதிகா டான்ஸ் இருக்கிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் சொத்து மதிப்பிலும் தன்னை ஒரு பாஸ் லேடி என நிரூபித்திருக்கிறார் ஜோதிகா.

Also Read:முத்தி போன சண்டை.. முடிவுக்கு வரும் உலக அழகியின் திருமண வாழ்க்கை

Trending News