வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

விஜய், அஜித்துக்கு சவால் விட்ட ஜோதிகா.. இன்னுமும் செய்து முடிக்காத டாப் ஹீரோக்கள்

Jyotika: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித், விஜய்க்கு ஜோதிகா நேரடியாக ஒரு சவால் விட்டிருக்கிறார்.

ஜோதிகா கண்ணை உருட்டி மிரட்டுவார் என சிலர் விளையாட்டாக சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மிரட்டி சவால் விடும் அளவுக்கு பயங்கரமான ஆளாக இருக்கிறார்.

தன்னுடன் ஜோடி போட்ட அஜித் மற்றும் விஜய்யால் இதை பண்ண முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்.

சவால் விடும் ஜோதிகா

அதாவது ஜோதிகா மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்ட படம் தான் சந்திரமுகி.

இது குறித்து தன்னுடைய திருமணத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் என்றால் அது ஜோதிகா தான்.

அது மட்டும் இல்லாமல் படத்திற்கே ஜோதிகா ஏற்று நடித்த கேரக்டர் பெயர் தான்.

இதே மாதிரி ஹீரோயினை மையப்படுத்தி ஹீரோயின் பெயர் வைக்கும் படத்தில் நடித்து காட்ட முடியுமா என அஜித் மற்றும் விஜய்க்கு சவால் விட்டு இருக்கிறார்.

அஜித் மற்றும் விஜய் என்று இல்லை சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற ஹீரோக்களுக்கும் இந்த சவாலை விடுகிறேன். இதை செய்து காட்டுங்கள் என அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Trending News