திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

குஷி பட ஜோதிகாவை பார்த்த அதே ஃபீல், குட்டி ஜோவின் வைரல் புகைப்படம்.. அம்மாவை மிஞ்சிய அழகு

Actress Jyothika Daughter: தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர்கள் ஆக இருக்கும் சூர்யா- ஜோதிகா இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சூர்யா தற்போது மும்பையில் குடும்பத்துடன் குடியேறிவிட்ட நிலையில், அவ்வப்போது மீடியாக்களின் கண்களில் பட அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது.

 அதிலும் லேட்டஸ்ட் புகைப்படத்தில் சூர்யாவின் மகள் தியாவை பார்க்கும் போது அச்சு அசல் குஷி படத்தில் ஜோதிகா எப்படி இருந்தாரோ அதே மாதிரி இருப்பது போல் ஃபீல் ஆகிறது. இந்த புகைப்படத்தில் குட்டையான உடையில் தியாவை பார்க்கும் போது  அம்மாவை மிஞ்சிய அழகுடன் இருக்கிறார்.

Also Read: அட்வகேட் கதாபாத்திரத்தில் அசத்திய 5 நடிகைகள்.. வெண்பாவாக போராடிய ஜோ

 நிச்சயம் இவர் மட்டும் சினிமாவில் நடிக்க வந்தால் டாப் நடிகைகளுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுப்பார். தற்போது சூர்யா பிள்ளைகளின் படிப்பு மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சிக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே மும்பையில் பல கோடி மதிப்பில் வீடு வாங்கி  சென்னையில் இருந்து சென்று விட்டார். 

இப்போது அவர்களின் பிள்ளைகளான தியா மற்றும் தேவ் இருவரும் திருபாய் அம்பானி பள்ளியில் படித்து வருகின்றனர். சூர்யா மும்பை சென்ற பிறகு அவ்வப்போது குடும்பத்துடன் வெளியே வரும்போது மீடியாவின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாலும், எப்படியாவது அவர்களது புகைப்படம் வெளிவந்து விடுகிறது.

Also Read: பல கோடிக்கு கார்களை மட்டுமே குவித்து வைத்திருக்கும் சூர்யா.. ஒட்டு மொத்த சொத்து மதிப்பு

 அதிலும் சூர்யா- ஜோதிகா தங்களின் பிள்ளைகளோடு மும்பையில் பந்த்ராவில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு வந்து செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தார்கள். அதில் சூர்யாவுடன் அவருடைய மகளும் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

 குழந்தையாக பார்த்து தியாவை இப்போது பார்க்கும்போது நெடு நெடுன்னு வளர்ந்து கதாநாயகி லுக்கில் இருக்கிறார். பிளைன் பிளாக் ஷார்ட் உடையில் ரொம்பவே க்யூட்டாக இருக்கும் தியா அழகில் அவருடைய அம்மா ஜோதிகாவையே மிஞ்சி விட்டார். இவர் விரைவில் படிப்பை முடித்துவிட்டு படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

குட்டி ஜோவின் வைரல் புகைப்படம்

suriya-daughter-cinemapettai
suriya-daughter-cinemapettai

Also Read: பொட்டிப் பாம்பாக மாறிய சூர்யா.. முழுசாக தன் பக்கம் இழுத்த ஜோதிகா

- Advertisement -

Trending News