வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஹனிமூன் மூட்டில் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி பாண்டியன்.. செம க்யூட்டான புகைப்படம்

Actress Keerthi Pandiyan Honeymoon Photos: நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் 3-வது மகள்தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அதில் தன்னுடைய போல்டான நடிப்பை வெளிக்காட்டினார். ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இணைந்து சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன் பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண தம்பதியர் பாரிசுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட ஹனிமூன் புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் சீக்கிரம் வைத்திருந்தார்.

ஆனால் முதல் முதலாக தங்களது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு இன்று பிறந்தநாள் கொண்டாடும் அசோக் செல்வனுக்கு உருக்கமான வாழ்த்து பதிவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை அணைத்தபடி இருவரும் புன்னகையுடன் இருக்கின்றனர்.

Also read: அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு.. தன்னம்பிக்கையால் சாதித்த நடிகை

பின்புறத்தில் வானவில்லும் அழகாக தெரிகிறது. இந்த ஜோடி ரொம்பவே வித்தியாசமான ஜோடி என ஏற்கனவே ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இவர்களது திருமணத்தை வழக்கத்திற்கு மாறாக இயற்கையோடு இணைந்து செம்மண் தரையில் செட்டு போட்டு நடத்தினர்.

இப்போது பாரிஸில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த ஜோடிக்கு சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல கீர்த்தி பாண்டியன் தன்னுடைய காதல் கணவருக்கு வாழ்த்து பதிவையும் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் ‘ நீங்கள் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் நம்மை சுற்றி உள்ள இயற்கையிலும் சிறந்ததை வெளிப்படுத்துகிறது. உங்கள் பெரிய இதயத்திற்கு நீங்கள் எல்லாவற்றையும் மிகுதியாக பெறுவீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்

keerthi-pandian-honeymoon-photo
keerthi-pandian-honeymoon-photo

Also read: அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

Trending News