ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரெண்டு பெண்ணுங்களை பெத்த நீ எல்லாம் ஒரு மனுஷியா.? கோயில் கட்டின குஷ்புவை வெளுத்து வாங்கிய பிரபலம்

Actress Kushboo: மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் கலவரமும் மற்றும் இரண்டு தினங்களுக்கு முன் அங்கு நடைபெற்ற ஒரு கோர சம்பவத்தின் வீடியோவும் தான் இன்று இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு கட்சித் தலைவர்களில் இருந்து பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் இந்த பிரச்சனைக்கு எதிராக பல கண்டன குரல்களும், போராட்டங்களும் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் ஒட்டுமொத்த கேள்விகளும் நடிகை குஷ்பு பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவர் சார்ந்திருக்கும் தேசிய கட்சி தான். குஷ்புவும் பொதுவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு, இதற்கு மௌனம் காத்து வருகிறார்.

Also Read:உண்மையான பெயரை வைத்து எழுதப்பட்ட 7 நடிகைகளின் பாடல்கள்.. தலைவர் ஜோடி போட்டு ஆடிய கொண்டையில் தாழம்பூ – குஷ்பூ

கடந்த மாதம் ஆளும் கட்சியை சேர்ந்த பேச்சாளர் ஒருவர் குஷ்பூவை பற்றி பொதுமேடையில் தவறான கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு குஷ்பூ பயங்கர கண்டனம் தெரிவித்ததோடு ஒட்டுமொத்த மீடியாவையும் வரவழைத்து சரமாரியாக கேள்விகள் கேட்டதோடு கண்ணீர் மல்க பேசி இருந்தார். தற்போது இதுவே அவருக்கு எதிராக திரும்பி விட்டது.

அதாவது குஷ்பூவை ஒருவர் தவறாக மேடையில் பேசியதை தாங்கிக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறினார். சம்பந்தப்பட்ட கட்சியும் பேசிய நபரை கட்சியை விட்டு நீக்கியது. மணிப்பூரில் தற்போது இரண்டு பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு குஷ்பூ எல்லோரையும் போல பொதுவாக கருத்துக்களை சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.? தவறாக விமர்சித்தவரின் வீட்டுப் பெண்களை வம்புக்கிழுத்த குஷ்பூ

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து கொண்டு இது போன்ற கொடுமைகளுக்கு எப்படி வாய் திறக்காமல் இருக்கிறீர்கள். மேலும் உங்களை ஒருவர் தவறாக பேசியதற்கு அவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்த நீங்கள் தற்போது வாயை மூடி கொண்டிருப்பது சரியா என்றும் கேட்டிருக்கிறார்கள்.

மணிப்பூரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மொத்த நாடும் கொதித்துப் போய் இருக்கிறது. ஆனால் குஷ்பூ ஆளும் கட்சியிலேயே இருந்து கொண்டு இதைப் பற்றி பேச தைரியம் இல்லாமல் இருப்பது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Also Read:என்னை சீண்டி பார்த்தால் தாங்க மாட்டீங்க.. அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் ஆவேசமாக பேசிய குஷ்பு

Trending News