ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

53 வயதிலும் இளமை மாறாமல் குஷ்பு வெளியிட்ட வைரல் புகைப்படம்.. உங்களுக்கு கோயில் கட்டுனது தப்பே இல்ல!

Actress Kushboo Latest Photo: 40 வருடங்களாக சினிமாவில் இருக்கும் நடிகை குஷ்பூ, டாப் ஹீரோயின் ஆக இருந்தபோது இவருடைய அழகில் ரசிகர்கள் மயங்கி கோயில் கட்டினார்கள். ஆனா அதெல்லாம் இப்போ தப்பே இல்ல என நிரூபித்து விட்டார். 53 வயதிலும் குஷ்பூ சிக்குனு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகிறது.

முன்பெல்லாம் குண்டு குண்டுன்னு இருக்கிற இட்லியை ‘குஷ்பு இட்லி’ என்று சொல்வார்கள். ஆனால் இப்போது குஷ்பூவை பார்த்தால் நிச்சயம் அந்த வார்த்தையை யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு குஷ்பூ தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்து 20 வயது இளம் பெண் போல் மாறிவிட்டார்.

விட்டா, இவங்க ஹீரோயினா கூட நடிப்பாங்க போல, அந்த அளவிற்கு ஸ்லிம்மாகி டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சின்னத்தம்பி குஷ்பூவா இது! என ஆச்சரியப்படுகின்றனர். இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு முறைப்பொண்ணா நடிச்ச போது கூட குண்டாக தான் இருந்தார்.

ஆனா இப்போது ரஜினிக்கு ஜோடியாகவே நடிக்கும் அளவுக்கு வந்து விட்டார். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஆர்வம் கொண்ட குஷ்பூ, இப்போது பாஜக கட்சியில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு சோசியல் மீடியாவை பரபரப்பாகவே வைக்கக் கூடியவர்.

Also Read: மன்சூரை விட த்ரிஷாவை கொச்சைப்படுத்திய சர்ச்சை நடிகர்.. இதுல குஷ்பு மீனா மானமும் போச்சு

குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்

2019ல் அரசியலில் நுழைந்த குஷ்பூ முதலில் திமுக அதன் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்போது பாஜகவில் பொறுப்பில் உள்ளார். சினிமாவிலும் தற்சமயம் குணசித்திர கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பூ, தற்போது வரை 100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இவருடைய கணவர் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு 130 கோடிக்கு மேல் இருக்கும்.

இளசு போல் மாறிய குஷ்பு

kushboo-latest-pic-1-cinemapettai
kushboo-latest-pic-1-cinemapettai

அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லும் குஷ்பூ, அங்கே எடுக்கக்கூடிய ஸ்டைலிஷ் புகைப்படத்தையும் பதிவிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறார். அதிலும் இப்போது சுடிதாரில் இளசு போல் மாறி இருக்கும் குஷ்புவின் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.

இளமை மாறாமல் சிக்குனு இருக்கும் குஷ்பு

kushboo-latest-pic-2-cinemapettai
kushboo-latest-pic-2-cinemapettai

Also Read: பிரபு- குஷ்புவுக்கும் திருமணமே ஆகிவிட்டது.. பேட்டியில் மொத்தத்தையும் போட்டுடைத்த பிரபலம்

Trending News