ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நடிகை லட்சுமியின் முதல் கணவர் இவர்தானா?. அட இது நம்ம தேவயானி அப்பா தான!

Actress Lakshmi ex-husband: நடிகை லட்சுமி 70 மற்றும் 80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். இவருடைய நடிப்பில் 2k கிட்ஸ்கள் வரை பரீட்சியமான படம் என்றால் சம்சாரம் அது மின்சாரம், ஜீன்ஸ் படத்தை சொல்லலாம். அதைத் தொடர்ந்து முரளி, விஜயகாந்த், சரத்குமார், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் கலக்கி இருக்கிறார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

முன்னணி நடிகையாக இருந்த லட்சுமியின் மகள் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகை லட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்திருந்தாலும், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

நடிகை லட்சுமி பிரபல நடிகர் சிவசந்திரன் என்பவரை திருமணம் செய்து 38 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வருகிறார். சிவசந்திரன் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, டிசம்பர் பூக்கள், மங்கை ஒரு கங்கை போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர். என்னுயிர் கண்ணம்மா என்னும் படத்தில் லட்சுமி உடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

Also Read:ரெக்க கட்டி பறந்த நடிகை லட்சுமி மேனன்.. தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?

நடிகை லட்சுமிக்கு ஏற்கனவே பாஸ்கரன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. அதன் பின்னர் பிரபல நடிகர் மோகன் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மோகன் சர்மா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் லட்சுமி தான் தன்னை முதலில் காதலித்ததாகவும், மும்பையில் விளம்பர சூட்டிங் ஒன்றிற்காக வந்திருந்தபோது மோகனை போனில் அழைத்து தன்னுடன் ஷாப்பிங் வர சொல்லி இருந்தாராம்.

ஷாப்பிங் முடிந்த பிறகு லட்சுமி அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு மோகன் சர்மாவை அழைத்துக் கொண்டு போனாராம். அங்கு லட்சுமி மோகன் மீது தனக்கு இருந்த காதலை வெளிப்படுத்தியதாகவும் திருமணத்திற்கு முன்னரே இருவரும் நெருங்கி பழகியதாகவும் மோகன் சர்மா சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து லட்சுமியை அவர் திருமணம் செய்து 5 வருடங்கள் அவருடன் வாழ்ந்திருக்கிறார்.

மோகன் சர்மாவை காதலித்த திருமணம் செய்திருந்தாலும் லட்சுமிக்கு அதன் பிறகு ஒரு சில ஆண்களுடன் தவறான உறவு இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் மோகன் சர்மா லட்சுமியை விவாகரத்து செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதோடு, அட இவர் தேவயானியின் அப்பாதானே என நிறைய பேர் கமெண்ட் செய்து வருகிறார்கள். இவர் தேவயானியின் நிஜ அப்பா என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தேவயானி நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற கோலங்கள் சீரியலில் அவருக்கு அப்பா கேரக்டரில் நடித்தவர்தான் இந்த மோகன் சர்மா.

Also Read:50 படங்கள் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. வரலட்சுமிக்கு போட்டியாக கல்யாணத்துக்கு ரெடியான முத்திப்போன நடிகை

Trending News