தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை. வெள்ளாவியில் வைத்து வெளுத்து போன்ற நிறமும், பப்ளியாக இருந்த அவருடைய தோற்றமும் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.
இதனால் அவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். நடிகைக்கு அழகே அவரின் அந்த குண்டு உடல் தான். ஆனால் நடிகையோ திடீரென்று என்ன நினைத்தார் என்று தெரியவில்லை குண்டாக இருந்த தன்னுடைய உடலை வெகுவாக குறைத்தார்.
நடிகையை எலும்பும், தோலுமாக பார்த்த ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர். பார்க்கவே ரொம்பவும் பரிதாபமாக, வயதானவர் போன்ற தோற்றத்தில் நடிகை இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
உடல் எடையை குறைத்தால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நடிகைக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் நடிகை தன்னுடைய போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிட்டு வந்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தான் கிடைக்காமல் போனது. ஒரு கட்டத்தில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தபோது நடிகை ரொம்பவும் டென்சனாகி விட்டாராம். இதனால் தன்னை வைத்து ஒரு பேய்ப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்த இயக்குனருக்கு நடிகை போன் போட்டு வாய்ப்பு கேட்டு உள்ளார்.
அதற்கு இயக்குனரோ வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி நடிகையை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாராம். சமீபத்தில்கூட நடிகை ஏற்கனவே நடித்த பேய் படத்தின் அடுத்த பாகம் வெளியானது. அதில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எண்ணி நடிகை தற்போது நொந்து போயுள்ளாராம்.