வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடித்த 7 படங்களில் ஆறு சூப்பர் ஹிட்.. ரஜினிக்கு மட்டும் அட்டர் ஃப்ளாப் கொடுத்த ஹீரோயின்

Actress manisha koirala hit films in tamil: குறுக்கு சிறுத்த நடிகை ஆன மனிஷா கொய்ராலா தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் க்ரஷ் ஆகவே இருந்துள்ளார் இந்த மனிஷா.

நேபாள  இறக்குமதியான மனிஷா ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். மணிரத்தினத்தின் அழைப்பை ஏற்று தமிழகம் வந்த மனிஷா முதலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சப்ஜெக்ட் என்று மறுத்து விட பின் பாலிவுட் நண்பர்களின் அறிவுறுத்தலின் மூலமாக மணிரத்தினம் பற்றிய அறிந்து பம்பாய் படத்திற்கு ஓகே சொன்னாராம்.

பம்பாய் படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப்  நடித்ததும் மணிரத்தினத்தை மனம் திறந்து பாராட்டினாராம். பம்பாய் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து உயிரே, முதல்வன், இந்தியன், ஆளவந்தான், மாப்பிள்ளை என இவன் நடித்த படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்து கொண்டிருந்தது.

Also read: ஆசைக்காட்டி நடிகையை கர்ப்பமாக்கிய இயக்குனர்.. விஷயம் வெளியில் தெரியாமல் நடந்த அவசர திருமணம்

ஆளவந்தானில் சிகரெட் புகைத்து ரசிகர்களை வாயடைக்க வைத்த மனிஷா அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாபாவில் ஒன்றிணைந்தார். எதிர்பாராத விதமாக இப்படம் தோல்வியை சந்தித்தது. இவரின் கேரக்டரும் பெரிதாக பேசப்படவில்லை.

வெளிநாடு சென்று மருத்துவம் மேற்கொண்டு கம்பேக் கொடுத்தார் மனிஷா. அழகான ராட்சசியாக இருந்தவர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுசுடன் மாப்பிள்ளை படத்தில்  அழகான மாமியார் கேரக்டரில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து திருமணம், விவாகரத்து  என காலத்தின் கோலத்தில் குடிப்பழக்கம் மற்றும்  புற்றுநோயும் வந்துவிட மனிஷாகொய்ராலா நிலைகுலைந்து போனார். வெளிநாடு சென்று மருத்துவம் மேற்கொண்ட பின் தற்போது செல்ல குழந்தைகளாக நாய் மற்றும் பூனையை வளர்த்து வரும் மனிஷா இவைகளுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

Also read: வாயால் வாழ்ந்துகெட்ட 5 நடிகைகளின் சோகக் கதை.. விவாகரத்தே மேல் என பிடித்ததை விட மறுத்த அமலாபால்

Trending News