புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

துணிவு மஞ்சு வாரியருக்கு இவளோ பெரிய மகளா.? அதிகமாக ஷேராகும் 23 வயது புகைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் மூலம் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் மலையாள லேடிஸ் சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார். அந்தப் படத்திற்கு பிறகு தற்போது அஜித் நடிப்பில் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் துணிவு படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

44 வயதான மஞ்சு வாரியர் இப்போதும் இளமை மங்காமல் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு மீனாட்சியும் ஒரு மகளும் உள்ளார்.

Also Read: ரியாலிட்டி ஷோவில் கெட்ட வார்த்தையில் பேசிய மஞ்சு வாரியர்.. இப்படி விளம்பரம் தேடுவது ஒரு பொழப்பா

பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் மஞ்சுவாரியரின் மகளான மீனாட்சியின் சமீபத்திய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. 23 வயதான மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சியின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக ஷேர் ஆகி கொண்டு இருக்கிறது.

மஞ்சு வாரியர் 44 வயதில் துருதுருவென மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் ரவுண்டு கண்டு கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு 23 வயதில் இவ்வளவு பெரிய மகளா! என்றும் பலரும் ஆச்சரியத்துடன் மீனாட்சியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவரும் கூடிய விரைவில் கதாநாயகியாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

மஞ்சுவாரியரின் மகளான மீனாட்சியின் சமீபத்திய புகைப்படம்

manju-warrier-daughter-1
manju-warrier-daughter-1

Also Read: இந்த 5 படங்களில் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட மஞ்சு வாரியர்.. நடிப்பு அரக்கனை மிஞ்சிய பச்சையம்மாள்

Trending News