Simran: நடிகை நக்மா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். எல்லோருடனும் ஜோடி சேர்ந்தார். அதிலும் பாட்ஷா படம் நக்மாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.
ஆனால் விஐபி பட ரிலீசுக்கு பிறகு சிம்ரன் கொஞ்சம் கொஞ்சமாக நக்மாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்.
சிம்ரன் இளம் நடிகை என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
நக்மா போட்ட திட்டம்
இதை தன்னுடைய தங்கை ஜோதிகா மூலம் தட்டிப் பறிக்க வேண்டும் என நடிகை நக்மா திட்டம் போட்டு இருக்கிறார்.
நக்மாவின் திட்டப்படி ஜோதிகாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் அதில் அடி வாங்கியது சிம்ரனின் மார்க்கெட்டு இல்லை. நக்மாவின் மார்க்கெட் தான்.
ஜோதிகாவும் அப்படியே நக்மா சாயலில் இருப்பதால் நக்மாவுக்கு கொடுக்க வேண்டிய அத்தனை வாய்ப்பையும் ஜோதிகாவுக்கு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிம்ரனின் உடலமைப்பு, நடிப்பு திறமை நடன அசைவு தனித் தன்மையாக இருந்ததால் அவருடைய மார்க்கெட்டை ஜோதிகாவால் எதுவுமே செய்ய முடியவில்லை.
கடைசியில் தங்கச்சியை இறக்குமதி செய்துவிட்டு பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு மும்பைக்கே போனது நக்மா தான்.