புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

என்னை எரித்து கூட சோதித்து பாருங்கள்.. மும்பையை அலற விட்ட நயன்தாரா!

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. தென்னிந்தியாவில் இருக்கும் வரைக்கும் நயன்தாரா பெரிதாக வதந்திகளுக்கு எல்லாம் அலட்டிக் கொண்டவர் கிடையாது. ஒன்று இரண்டு காதல் தோல்விகள், ஏகப்பட்ட வதந்திகள் என நயன்தாராவுக்கு அப்போது பல நெருக்கடிகள் இருந்தது.

இருந்தாலும் எதற்குமே நயன் அசந்தது கிடையாது. பாலிவுட் பக்கம் போனதும் தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு எல்லாம் பதில் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் போல. அதனால் தான் என்னை எரித்து கூட சோதித்துப் பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை வந்திருக்கிறது.

நயன்தாரா அறிமுகமான புதிதில் உடல் பருமனாக இருந்தார். அதன் பின்னர் படத்திற்கு படம் எடை அதிகமாகவே குறைத்தார். அதிலும் வில்லு பட சமயத்தில் நயன்தாரா ஆபரேஷன் பண்ணி உடம்பிலுள்ள கொழுப்புகளை அகற்றியதாக சொல்லப்பட்டது.

மும்பையை அலற விட்ட நயன்தாரா!

அந்த ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கலை இழந்து போன நயன்தாரா படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய அழகு மெருகேறியதை நிரூபித்தார். இதை தொடர்ந்து நயன்தாராவுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்தார்.

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய நீண்ட நாள் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அழகான இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். நயன்தாராவுக்கு திருமணமான சமயத்தில்தான் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான் படம் ரிலீஸ் ஆனது.

இதை தொடர்ந்து நயன்தாராவிற்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் மும்பையில் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு நயன்தாரா பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். இதில் பல வருடங்களாக நயன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்த பேட்டியில் எனக்கு என்னுடைய புருவம் ரொம்பவும் பிடிக்கும். அதில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்த நான் ரொம்பவே விரும்புவேன். புருவம் தான் நமக்கு எப்போதுமே கேம் சேஞ்சராக அமையும். அப்படி நான் புருவத்தை மாற்றும் பொழுது என்னுடைய முகமே மாறியது போல் இருக்கிறது.

மற்றபடி உடல் எடை குறைப்பு, டயட் போன்றவைகளை தான் நான் பின்பற்றுகிறேன். இதனால் தான் அடிக்கடி என்னுடைய கண்ணம் ஒட்டியது போலவும், தடிமனாகவும் தெரிகிறது. இதை தவிர்த்து நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. என்னை கிள்ளி பாருங்கள், ஏன் எரித்து கூட பாருங்கள் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை என அந்த வீடியோவில் சொல்லி இருக்கிறார்.

Nayanthara
Nayanthara
- Advertisement -spot_img

Trending News