
Nayanthara: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். அதுதான் நடிகை நயன்தாராவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
என்னதான் தன்னை பிசியான நடிகை என்று தன்னை காட்டிக் கொண்டாலும் நயன்தாராவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் எதுவுமே கிடையாது.
நயனை கவனிச்சீங்களா?
தமிழ் சினிமாவில் அவர் முழுக்க நம்பி இருப்பது மூக்குத்தி அம்மன் படத்தை தான். இந்த படத்தின் பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
படங்களின் பிரமோஷன் விழாக்களில் கலந்து கொள்ளாத நயன் பட பூஜைக்கு வந்திருந்தார். நயன்தாராவை பொருத்தவரைக்கும் தன்னுடைய படத்தில் தனக்கு பிரண்டாகவோ, தங்கையாகவோ வேறு பிரபல நடிகைகள் நடிக்க கூடாது என்று நினைக்க கூடியவர்.
குசேலன் படத்தில் ஒரு பாட்டுக்கு மம்தா மோகன் தாஸ் ஆட போகிறார் என்று தெரிந்து முடியவே முடியாது என மறுத்திருக்கிறார். இந்த விஷயத்தை நடிகை மம்தா மோகன் தாஸ் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
அப்படிப்பட்ட நயன் தற்போது ரெஜினா கசான்டிரா மற்றும் அபிநயா நடிகர்கள் என தெரிந்து மூக்குத்தி அம்மன் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் 90களில் டாப் ஹீரோயினாக இருந்த மீனாவும் இந்த படத்தில் இருக்கிறார். மார்க்கெட் குறைய குறைய கொள்கைகள் அத்தனையையும் தகர்த்தி வருகிறார் நயன்.