வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ட்ரான்ஸ்பரண்ட் புடவை , மல்லிப்பூ என குடும்ப குத்து விளக்காக மாறிய நயன்தாரா.. மறைமுகமாக விக்கிக்கு சொன்ன அட்வைஸ்

நடிகை நயன்தாரா இன்றைய தென்னிந்திய சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். திருமணத்திற்கு பின்னும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பொதுவாக நயன்தாரா எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அவருடைய படங்களின் பிரமோஷனுக்கே நயன்தாரா போக மாட்டார் என்பது கூட இன்றளவும் சர்ச்சையாக தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட நயன்தாரா கிட்டத்தட்ட தன்னுடைய 20 வருட சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி தான். சென்னையில் உள்ள சத்தியபாமா யுனிவர்சிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவும் நடிகர் ராணாவும் கலந்து கொண்டுள்ளனர்.

Also Read: விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரல் ஆகி கொண்டிருக்கிறது. வயலட் கலர் ட்ரான்ஸ்பரண்ட் புடவை மற்றும் தலையில் மல்லிகை பூ என்று ஒரு தேவதை போல் வந்திருந்தார். மொத்த அரங்கமும் அவருடைய அழகில் சொக்கி தான் போனது.

அது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா ரொம்பவும் கலகலப்பாக ரசிகர்களிடையே உரையாடினார். அப்போது பேசிய நயன்தாரா உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை நினைத்து ரொம்பவும் மன அழுத்தம் கொள்ளாதீர்கள் என்றும் கண்டிப்பாக எல்லோரும் ஒருநாள் ஜெயிப்போம் அப்படி ஜெயிக்கும் நேரத்தில் கவலையிலேயே நிறைய நாட்களை இழந்து விட்டோமோ என்று யாரும் என்ன கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

Also Read: லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய இரண்டு இயக்குனர்கள்.. ஏகே 62 படத்தின் விறுவிறு அப்டேட்

இது நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக மறைமுகமாக சொல்லியது போல் தான் இருக்கிறது. அஜித்துக்கு படம் பண்ண வேண்டிய விக்னேஷ் சிவனிடம் இருந்து அந்த வாய்ப்பு விலகி இருக்கிறது. எனவே இந்த சமயத்தில் தன்னுடைய கணவருக்கு மறைமுகமாக ஆறுதல் சொன்னது போலவே இந்த வார்த்தைகள் இருக்கிறது.

மேலும் பேசிய நயன்தாரா இந்த காலத்தில் சரியான நண்பர்களுடன் பழகுங்கள் என்றும், கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போது எல்லோரும் வெற்றியுடன் தான் செல்ல வேண்டும் என்றும், மேலும் உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒரு நாளில் பத்து நிமிடம் உங்கள் பெற்றோருக்காக செலவிடுங்கள் என்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

Also Read: 90% உறுதியான ஏகே 62.. பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் படக்குழு

Trending News