செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ராம்கியை கண்ணீர் விட வைத்த நிரோஷாவின் 5 ஹாட் பாடல்கள்.. கார்த்திக்கும், கமலும் அடித்த லூட்டிகள்

Actress Nirosha: கருப்பழகியாக தமிழ் சினிமாவில் 80களில் ரவுண்டு கட்டி நடித்தவர்தான் நடிகை நிரோஷா. இவர்  டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் இவர் கவர்ச்சியாக ஆடிய 5 பாடல்கள் ரொம்பவே பேமஸ் ஆனது. அதிலும் நவரச நாயகன் மற்றும் உலக நாயகன் இருவருடனும் இவர் போட்ட கும்மாளம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதை எல்லாம் பார்த்த அவருடைய கணவருக்கு ரத்தக்கண்ணீரே வந்திருக்கும். அந்தப் பாடல்கள் எவை என்பதை பார்ப்போம் .

அக்னி நட்சத்திரம்: மணிரத்தினம் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் தான் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அமலாவும், கார்த்திக்கு ஜோடியாக நிரோஷாவும் நடித்தார். இந்த இரண்டு ஜோடிகளில் ரொம்பவே க்யூட் ஜோடியாக இருக்கக்கூடிய கார்த்திக்- நிரோஷா இருவரையும் ‘வா.. வா.. அன்பே அன்பே..’ என்ற பாடலில் மணிரத்தினம் செம ஹாட் ஆக டூயட் ஆட வைத்திருப்பார். குரூப் டான்ஸர் இல்லாமல் கார்த்திக் மற்றும் நிரோஷா இருவரும் கடற்கரையில் நீச்சல் உடையில் கிளாமர் தூக்கலாக டூயட் பாடி இருப்பார்கள்.

இந்தப் பாடலை நிச்சயம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சேர்ந்து பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு கவர்ச்சியாக இருக்கும். கார்த்தி நிரோஷாவை தடவுவதும், நிரோஷா அதற்கு வெட்கப்பட்டு கொண்டு சிணுங்குவதை நம்மளாலேயே பார்க்க முடியலையே பாவம் நிரோஷாவின் கணவர் ராம்கி எப்படி இந்த பாட்டை பார்த்து ஜீரணித்தார் என்று தெரியவில்லை.

Also Read: 90களில் கவர்ச்சிக்காகவே வாய்ப்பை பெற்ற 6 நடிகைகள்.. கமல் சூரசம்ஹாரம் செய்த ஹீரோயின் நிரோஷா

சூரசம்ஹாரம்: கமலஹாசனுக்கு நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதற்கு சொல்லித் தரவா வேண்டும். சூரசம்ஹாரம் என்ற படத்தில் ஏசிபிஅதி வீரபாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் உலக நாயகன் கம்பீரமாக தோற்றத்திலும், சுதா என்ற கேரக்டரில் நிரோஷாவும் நடித்தனர். படத்தில் காதலர்களாக இருக்கும் கமல் மற்றும் நிரோஷா இருவரும் ‘நான் என்பது நீ அல்லவோ..’ என்ற டூயட் பாடலில் தங்களது ரொமான்ஸை அளவு கடந்து வெளிப்படுத்தி காதலின் மகிமையை காட்டினர்.

இதில் கமல் நிரோஷாவின் மீது உருண்டு பெரண்டு ஒரு வழி பண்ணியிருப்பார். கார்த்திக்கு எப்படி கடற்கரை வாய்த்ததோ, கமலுக்கு நீர்வீழ்ச்சி சரியாக அமைந்துவிட்டது. இந்தப் பாடலில் நீர்வீழ்ச்சியில் அரைகுறை ஆடையில் இருவரும் செய்த அட்டூழியம் கண் கூசும் வகையில் இருக்கும். இதையெல்லாம் நிரோஷாவின் கணவர் ராம்கி பார்த்திருந்தால் நிச்சயம் நெஞ்சுவலியே வந்திருக்கும்.

இணைந்த கைகள்: 1990 ஆம் ஆண்டு என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் இணைந்த கைகள். இந்தப் படத்தில் நிரோஷா தன்னுடைய கணவர் ராம்கி உடன் இணைந்து நடித்தார். ஆனால் வயித்தெரிச்சல் என்னவென்றால், கணவர் ராம்கி உடன் இந்த படத்தில் நிரோஷா நடித்திருந்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்காமல் அருண் பாண்டியனின் காதலியாக நடித்தார். அது மட்டுமல்ல இந்த படத்தில் திருமணம் ஆகாமலே அருண் பாண்டியன் மற்றும் நிரோஷா இருவருக்கும் எல்லாம் முடிந்தது போல் காட்டி இருப்பார்கள். படத்தில் இருவருக்கும் கிளாமர் தூக்கலான படுக்கையறை காட்சியை அமைத்து ராம்கியை வயிறு எரிய வைத்தனர்.

Also Read: ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

பாண்டிய நாட்டு தங்கம்: டிபி கஜேந்திரன் இயக்கத்தில் கார்த்தி, நிரோஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் தான் பாண்டிய நாட்டு தங்கம். இதில் வன அதிகாரியாக கம்பீரமான கெட்டப்பில் தங்கப் பாண்டியனாக நடித்த கார்த்திக், கிராமத்து பெண்ணான ராதாவை துரத்தி துரத்தி காதலிப்பார். அப்போது வளையல்காரர் போல் வேஷம் போட்டுக் கொண்டு கார்த்திக் நிரோஷாவின் கையைப் பிடித்து வளையல் போடுவது போல் சில்மிஷம் செய்த போது ‘இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும்..’ என்ற பாடல் படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலில் கார்த்தி மற்றும் நிரோஷா இருவரும் கவர்ச்சி தூக்கலாக நடனம் ஆடி இருப்பார்கள்.

இந்தப் பாடலில் ஃபர்ஸ்ட் நைட் செட்டு போட்டு லைட்டை ஆஃப் பண்ணிட்டு என்ன என்ன பண்ணனுமோ, அதை எல்லாம் அப்பட்டமாக காண்பித்து இளசுகளை வெறியேற்றினர். அது மட்டுமல்ல கொட்டுகிற மழையில் ஈரம் சொட்ட சொட்ட இவர்கள் அடித்த லூட்டி பார்ப்பதற்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

சிலம்பாட்டம்: சிம்பு, சனா கான், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மசாலா திரைப்படமான சிலம்பாட்டம் என்ற படத்தில், நிரோஷா மாமி கெட்டபில் ஆன்ட்டி லுக்கில் நடித்தார். இதில் சந்தானத்துடன் இணைந்து நிறைய காமெடி காட்சிகளில் வந்தார். ஆனால் இந்த படத்தில் இவர் சிம்பு உடன் டபுள் மீனிங் டயலாக் நிறையவே பேசி படத்தைப் பார்ப்போரை வாய் அடக்க செய்திருப்பார்.

Also Read: 90களில் மாடர்னாக கலக்கிய 6 நடிகைகள்.. நதியாவிற்கு டஃப் கொடுத்த ஹீரோயின்

இந்த ஐந்து படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் காட்சிகளில் கண் கூசும் அளவுக்கு நிரோஷா நடித்து கணவர் ராம்கிக்கு கண்ணீர் வர வைத்துள்ளார். அதிலும் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நவரச நாயகன் கார்த்திக் உடன் இவர் செய்த அழிச்சாட்டியம் ரசிகர்களை மட்டுமல்ல அவருடைய கணவரையும் கதி கலங்க வைத்தது.

Trending News