வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

14 வயதில் அஜித்துக்கு ஜோடியான நடிகை.. பள்ளி மாணவியை ஹீரோயின் ஆக்கிய இயக்குனர்

அஜித் சமீபகாலமாக பாலிவுட் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் வித்யா பாலன், மஞ்சு வாரியர் போன்ற நடிகைகளும் அஜித்துடன் சேர்ந்து நடித்து விட்டனர். மேலும் இப்போது உள்ள இளம் நடிகைகளும் அஜித்துக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய 14 வயதிலேயே அஜித்துக்கு ஜோடியாக ஒரு நடிகை நடித்துள்ளார். அப்போது அவர் ஒன்பதாவது வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாராம். மேலும் அந்த படம் தான் சினிமாவில் அவரின் அறிமுகப்படமாக இருந்துள்ளது. அதன் பிறகு நடிகை சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Also Read : அஜித்தை பாலோ செய்யும் விஜய் சேதுபதி.. சத்தமே இல்லாமல் அவர் செய்யும் வேலை

அதாவது கடந்த 1993 ஆம் ஆண்டில் வெளியான அமராவதி என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடிக்கும் போது அவருக்கு 14 வயது தான் ஆனதாம். அஜித்தும் அப்போது இளம் வயதுடன் தான் இருந்தார். அஜித், சங்கவி இருவருக்குமே அமராவதி படம் முதல் படமாக அமைந்தது.

அதுமட்டுமின்றி புதுமுக படமாக அமராவதி இருந்தாலும் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அமராவதி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்து சங்கவி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Also Read : அஜித் பிறந்தநாளுக்கு வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்.. புது வில்லன் அவதாரத்தில் போட்ட அஸ்திவாரம்

அதாவது அமராவதி படத்தில் நடிக்கும் போது எனக்கு 14 வயது என்றும் அப்போது ஒன்பதாவது படித்ததாக கூறியிருந்தார். மேலும் எனக்கும், அஜித்துக்கும் இது முதல் படம் என்பதால் எங்களுக்கு நடிப்பே வரவில்லை. எங்களை வைத்து படம் எடுக்க இயக்குனர் மிகுந்த சிரமம் பட்டார். மேலும் ஒரு வழியாக படத்தை எடுத்த முடித்தார்.

அமராவதி படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி எனக்கும், அஜித்துக்கும் நிறைய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கியது என பெருமிதமாக சங்கவி பேசினார். மேலும் சங்கவி அந்த காலகட்டத்தில் விஜய், அஜித் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : முதல் 5 நாள் படத்திற்கு கூட்டமே இல்ல.. அடுத்த 80 நாட்களுக்கு தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன அஜித் படம்!

Trending News