வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தளபதி 69க்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கு அடித்த ஜாக்பாட்.. கை வசம் இருக்கும் 6 பெரிய ஹீரோக்களின் படங்கள்!

Pooja Hegde: வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல், பூஜா ஹெக்டேவின் வாழ்க்கை மாறி இருக்கிறது. இரண்டு வருடங்களாக இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி படங்கள் எதுவுமே இல்லை.

இவர் நடித்த படங்கள் அத்தனையுமே பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. தொடர் தோல்விகளை கொடுத்து வந்த இவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது.

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் அவருடைய கடைசி படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனார். அதை தொடர்ந்து பெரிய பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு வந்திருக்கிறது.

பூஜா கைவசம் இருக்கும் ஆறு படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கை வசம் இருக்கும் 6 பெரிய படங்கள்!

தேவா: சாகித் கபூருடன் பூஜா ஹெக்டே இணைந்திருக்கும் படம் தான் தேவா. இந்த படத்தை ரோஷன் அண்ட்ரோஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

85 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ரெட்ரோ: ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கமிட் ஆகி இருக்கும் படம் தான் ரெட்ரோ. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

தளபதி 69: நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் தளபதி 69 பெரிய அளவில் எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.

ஏற்கனவே விஜய்யுடன் பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்திலும் விஜய் உடன் இணைந்து இருக்கிறார்.

வருண் தவான்: பூஜா ஹெக்டே, வருண் தவான் உடன் முதன் முதலில் இணைய இருக்கிறார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதிப்படுத்து இருந்தார்.

இந்தப் படத்திற்கு ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

துல்கர் சல்மான்: துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியில் ஒரு சூப்பரான ரொமாண்டிக் படம் உருவாக இருக்கிறது. இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சனா 4: எத்தனை பாகங்கள் வந்தாலும் காஞ்சனா எப்போதுமே சூப்பர் ஹிட் ஆகிவிடும். இதற்கு காரணம் அந்த படத்திற்கு மழலை பட்டாளங்களின் ஆதரவு அதிகம் இருப்பது தான்.

தற்போது காஞ்சனா நான்காவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை பூஜா ஹெக்டே இணைந்திருக்கிறார்.

Trending News