செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சினிமாவில் நடிக்க மறுக்கும் பூஜா.. அந்த மாதிரி கேரக்டரா.? காண்ட் ஆயிட்டாங்க!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அஜித், ஆர்யா, மாதவன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை பூஜா. இலங்கைப் பெண்ணான இவருக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

அந்த வகையில் அவர் பல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். அதிலும் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் இவர் பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறப்பாக நடித்த பூஜாவுக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தது.

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்த பூஜா திடீரென்று தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார். அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்ன பூஜா நடிகர் சங்க தேர்தலுக்காக சென்னை வந்திருந்தார்.

சற்று உடல் எடை கூடியிருந்த பூஜாவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவரை ரசிகர்களால் சோசியல் மீடியாவில் கூட அதிகம் பார்க்க முடியவில்லை. தற்போது சின்னத்திரை முதல் பெரிய திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தான் தவம் கிடக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது சோசியல் மீடியா பக்கம் அவ்வளவாக ஆர்வம் காட்டாத பூஜாவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து மெசேஜ் செய்து வந்தனர். இப்படி ரசிகர்களின் அன்பை பார்த்த பூஜா தற்போது தன் மீது இவ்வளவு பாசத்தை காட்டும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் பூஜா மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் தனக்கு இப்போது 44 வயது ஆகிவிட்டது. இனிமேல் எனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் ரசிகர்கள் அவரை மீண்டும் சினிமாவில் நடிக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

தற்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நடிகைகள் பலருக்கும் சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பூஜாவுக்கும் வாய்ப்புகள் நிறைய வருகிறது. ஆனால் அந்த கேரக்டர்கள் அனைத்தும் அம்மா, ஆன்ட்டி போன்ற வயதான கதாபாத்திரங்களாக இருக்கிறதாம். அதனால் தான் பூஜா சினிமாவில் நடிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

Trending News