ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நடிகை பூனமை கர்ப்பமாக்கி நாசம் செய்த இயக்குனர்.. மீண்டும் மீண்டுமா.. பெண்களுக்கான அத்துமீறல்கள்

தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் ஹீரோயினாக நடித்தவர் பூனம் கவுர். தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்பட சில படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமா பிரபல இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

முன்னதாக, இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ், தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இவர் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்று இப்படி பரபரப்பை கிளப்புகிறாரா? இல்ல இவர் சொல்வது எல்லாம் உண்மையா என்று ஒன்றும் புரியவில்லை.

சமீபத்தில் கூட இவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் மீதான அந்தரங்க புகார் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை பூனம் கவுர், “குற்றவாளியான ஷேக் ஜானியை இனி மாஸ்டர் என்று அழைக்ககூடாது. மாஸ்டர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நடிகையை கர்பமாக்கிய இயக்குனர்

சமீபத்தில் அந்த நடிகை முன்வைத்த குற்றச்சாட்டில், தெலுங்கு சினிமா பிரபல இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதில் நடிகை அல்லது இயக்குநர் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

அந்த நடிகையின் வயிற்றில் கருவை உருவாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்தி பெண்ணின் வாழ்க்கையை தொலைத்தது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் எல்லாம் இல்லை. அதை செய்தது இயக்குநர் தான் – என்று கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து, பூனம் கவுர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால், இது வரை அலுவலகம் வந்து புகார் கொடுக்கவில்லை. பல முறை அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தாலும் வரவில்லை.

புகாரும் எழுதி கொடுக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று சொல்லவில்லை” என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வர, அதற்க்கு நடிகை.. “இது தான் இங்கு பிரச்சனையை.. என்னைப் பற்றி கருத்து கூறாமல் திரிவிக்ரமைக் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இவர் தவறு நிகழ்ந்தற்கு பெண் மீது பழி போட முயற்சிக்கிறார்” என்று காட்டமாக பேசியுள்ளார்.

Trending News