வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

20 வயது கம்மியான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி.. வருங்கால மனைவியின் வைரல் புகைப்படம்

‘கடைசி வரை முரட்டு சிங்கிளாகவே இருப்பேன்’ என்று சபதம் இட்டுக் கொண்டிருந்த நடிகர் பிரேம்ஜி, இறுதியாக தனது பிரம்மச்சாரி வாழ்க்கைக்கு விடை கொடுத்திருக்கிறார். இவரைப் பெரும்பாலும் அவருடைய சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

இப்போது வெங்கட் பிரபு இயக்குகிற விஜய்யின் 68வது படமான ‘The Greatest Of All Time’ என்ற படத்திலும் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் புத்தாண்டு அன்று தனது எக்ஸ் பக்கத்தில் ‘இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனால் இவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது, அதுவும் இப்போது தெரிந்து விட்டது. 44 வயதாகும் பிரேம்ஜி 22 வயதுள்ள பாடகி வினைட்டா சிவகுமாரை நீண்ட நாட்களாக காதலிக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக ஊர் சுத்தி கொண்டிருக்கின்றனர்.

Also Read: 3 ஹீரோக்கு பின்னணி பாடல் பாடிய விஜய்.. 23 வருடத்திற்கு முன் சூர்யாவிற்கு கை கொடுத்த தளபதி

பிரேம்ஜி தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இந்த மாதத்தில் இவர்களது திருமணம் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் முத்தின கத்திரிக்காவான பிரேம்ஜிக்கு, 2k கிட்ஸ் உடன் திருமணமா! என்று இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் வாயை பிளக்கின்றனர்.

இன்னும் சில தினத்தில் பிரேம்ஜி தனது திருமண தேதியை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே 46 வயதான ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய காதலி சங்கீதாவை கரம் பிடித்தார், அவரை தொடர்ந்து இப்போது பிரேம்ஜியும் திருமணத்திற்கு தயாராகி விட்டார்.

பிரேம்ஜியின் வருங்கால மனைவி புகைப்படம்

pramji-couple-cinemapettai
pramji-couple-cinemapettai

Also Read: புட்டியை தொட்டதால் கெட்டு போன நடிகர்.. வெங்கட் பிரபு டீம்மை கலைத்த தளபதி

Trending News