வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

செருப்பால் அடித்த பதிலை சொல்லியும் புரோஜனமில்லை.. பிரியா பவானி சங்கரிடம் அற்பத்தனமாய் கேட்ட ரசிகர்கள்

கடந்த 2011ஆம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி, அதன் பின்பு 2014 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற காதல் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களிலும், சமீபத்தில் பிளட் மணி என்ற திரைப்படத்திலும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

அத்துடன் இவர் சமூக வலைதளங்களில் ரொம்பவே அக்டிவ்வாக இருப்பார். அவ்வபோது ரசிகர்களுடன் கலந்துரையாட வழக்கம் கொண்டவர். அந்த வகையில் இவர் சமீபத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று ஒயிட் கலர் டாப் அணிந்தபடி, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செம கெத்தா நடந்து வருகிறார்.

இந்த வீடியோவில் பவானி சங்கர் பாடி காட்களுடன் பலத்த பாதுகாப்பில் வந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கருப்பு பூனை எல்லாம் பெரிய, பெரிய நடிகர், நடிகைகளுக்கே தேவை. உங்களுக்கு எதுக்கு? நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் காட்டுகிறீர்கள் என்று பவானி சங்கரை சோஷியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர்.

எப்பொழுதுமே பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் வழக்கம் உடையவர். இப்படித்தான் இவரை சமீபத்தில் ரசிகர் ஒருவர், ‘உங்க Bra சைஸ் என்ன?’ என கேட்டதற்கு தன்னுடைய சைசை குறிப்பிட்டு அத்துடன் சரியான பதிலடி கொடுத்தார்

அதேபோன்று அவரை கிண்டல் செய்வோருக்கும் அவ்வப்போது பதிலளித்து அதன் மூலமே ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறார். அதைப் போன்று இப்பொழுது இந்த வீடியோவை வைத்து பங்கம் செய்யும் நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News