சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஜெயிலர் பட வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை.. எல்லாம் கிசுகிசுவால் வந்த பிரச்சினை

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் வரும் ஜனவரி 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலர் தாஸ் பற்றிய கதை என்று சொல்கிறார்கள். ஆனால் படக்குழுவினரிடம் இருந்து எந்த அறிவிப்பும் இது தொடர்பாக வரவில்லை.

Also Read: ஜெயிலர் படத்தில் நான் நடிக்கவில்லை.. அதிரடியாக அறிவித்த பிரபல நடிகை

இந்த படத்தில் முதலில் நடிக்க நடிகை பிரியங்கா மோகனையே படக்குழு அணுகி இருக்கிறது. ஆனால் பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதற்கு காரணமாக பிரியங்காவை சுற்றி வரும் வதந்திகளை கூறுகிறார்கள். பிரியங்கா மோகன் தமிழில் டான், டாக்டர் படங்களில் நடித்தார்.

இரண்டு படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் பிரியங்கா தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். ப்ரியங்கா மோகனின் முதல் படம் டாக்டரில் நடித்த போது அவரை பற்றியும், அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை பற்றியும் பரவலாக வதந்திகள் வர ஆரம்பித்தன.

Also Read: ஜெயிலர் படத்தால் அடித்த அதிர்ஷ்டம்.. மீண்டும் பிஸியான பால் பப்பாளி நடிகை

இப்போது மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்தால் இன்னும் கிசுகிசுக்கள் அதிகமாகி விடும் என பிரியங்கா டீசண்டாக இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். பிரியங்கா மோகன் கேரக்டரில் தான் இப்போது தமன்னா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் கடந்த 11 ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் உதவி இயக்குனராகவும், பல விருது நிகழ்ச்சிகளில் இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக இருந்த இவருக்கு ஜெயிலர் மூன்றாவது திரைப்படம்.

Also Read: ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. மீண்டும் கேலிக்கூத்துக்கு உள்ளான நெல்சன்

Trending News