சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராதிகா இல்லனா இந்த 5 படமும் ஒண்ணுமே இல்லை.. தாலியை வைத்தே மிரட்டிய சுந்தராம்பாள்

நடிகைகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிக்க கூடிய பன்முகத் திறமை கொண்ட நாயகி என்றால் அது ராதிகா தான். நடிப்பதற்கு விருப்பமே இல்லாமல் சினிமாவிற்குள் வந்த இவர் இன்று மற்ற நடிகைகள் எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ராதிகா கீழ் வரும் இந்த ஐந்து கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

கிழக்கு சீமையிலே – விருமாயி: தமிழ் சினிமாவில் பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை உறவை மையமாகக் கொண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் கிழக்கு சீமையிலே. இதில் ராதிகா நடித்த விருமாயி கேரக்டர் பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்டது. அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் விருமாயி படம் பார்க்கும் பலரையும் கலங்க வைத்திருந்தார்.

Also Read:என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

பசும்பொன் – நாச்சியார்: ராதிகா, சிவாஜி கணேசன், சிவகுமார், பிரபு ஆகியோர் நடித்த திரைப்படம் பசும்பொன். நடிப்பில் பட்டையை கிளப்ப கூடிய சிவாஜிக்கு டப் கொடுத்திருந்தார் ராதிகா. அப்பா துரைசாமி தேவர் ஆசைக்காக மறுமணம் செய்து கொள்ளும் நாச்சியார் தன்னுடைய மூத்த மகனின் அன்புக்காக ஏங்குவதும், கடைசியில் மகன் வந்து பால் ஊற்றிய பிறகு கண்களில் ஒரு சொட்டு கண்ணீருடன் உயிர் பிரிவது என ராதிகா நாச்சியார் கேரக்டரில் வாழ்ந்து இருந்தார்.

ஜீன்ஸ் – சுந்தராம்பாள்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிய பிரம்மாண்ட திரைப்படம் ஜீன்ஸ். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் சுந்தராம்பாள் கேரக்டர் இன்றுவரை சமூகவலை தளங்களில் இன்றுவரை பிரபலமாக இருக்கிறது. வெள்ளந்தியாக, பேச்சுத்திறமை கூட இல்லாத கணவனை தாலியை காட்டி மிரட்டும் காட்சியில் ராதிகாவை தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் எடுபட்டிருக்காது.

Also Read:பக்காவான கெமிஸ்ட்ரி, விஜயகாந்தை ரொமான்ஸ் செய்து கிறங்கடித்த 5 நடிகைகள்.. ‘ரா’-னு வந்தாலே கிறங்கி விழும் கேப்டன்

தங்க மகன் – தமிழின் அம்மா: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தங்கமகன் திரைப்படத்தில், அம்மா கேரக்டரில் நடித்த ராதிகாவுக்கு, தனுஷ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் காம்போவில் வரும் காட்சிகளும் அனைத்தும் தமிழ் சினிமா ரசிகர்களால் ரொம்பவும் ரசிக்கப்பட்டது.

தர்மதுரை – பாண்டியம்மா: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தர்மதுரை. இதில் பாண்டியம்மாவாக நடித்த ராதிகா தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்களை அப்படியே கண் முன் பிரதிபலித்திருந்தார். இறுக்கமான முகம், மகனுக்காக பரிதவிக்கும் தாய் என பல உணர்ச்சிகளை காட்டியிருந்தார்.

Also Read:தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

Trending News