புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பங்களாக்களை வாங்கி குவிக்கும் ராஷி கண்ணா.. 33 வயதில் வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Actress Rashi Kanna: தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த ராஷி கண்ணா இப்போது தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அவர் நடித்துள்ள அரண்மனை 4 வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவர் ஹைதராபாத்தில் மூன்றாவதாக ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கி இருக்கிறார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஒரு வீடும் 2017 ஆம் ஆண்டு ஒரு வீடும் வாங்கி இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் வாங்கி இருக்கும் வீடு அரண்மனை போல் இருக்கிறது. சமீபத்தில் இதன் கிரகப்பிரவேசம் நடந்து முடிந்தது.

ராஷி கண்ணாவின் சொத்து மதிப்பு

அதன் போட்டோக்கள் அனைத்தும் வைரலானது. இந்நிலையில் 33 வயதில் இவருக்கு இருக்கும் சொத்து மதிப்பு பற்றிய தகவலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதன்படி அரண்மனை நாயகியின் தற்போதைய சொத்து மதிப்பு 60 கோடியாக உள்ளது. ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவர் விளம்பர படங்கள், சோசியல் மீடியா மூலம் கல்லா கட்டி வருகிறார்.

அது மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் இவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. மேலும் ஆடி, பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர் என லேட்டஸ்ட் மாடல் கார்களும் இவரிடம் உள்ளது.

இப்படி கோடிகளின் ராணியாக இருக்கும் இவர் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இது தவிர வெப் சீரிஸில் நடிக்கவும் அம்மணி ஆர்வம் காட்டி வருகிறார்.

Trending News