Actress Rashmika behaved smartly: நேஷனல் கிரஷ் நடிகையாக கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அடுத்த மாதம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார். இந்த ஜோடி இரண்டு படங்களில் சேர்ந்த நடித்துள்ளது. கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி, அதன் பின் ‘டியர் காம்ரேட்’ படத்தில் மீண்டும் இணைந்தனர்.
இந்த ஜோடியை திரையில் பார்க்கும்போதே கண்ணுக்கு இனிமையாக இருந்ததால், நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேரப் போகிறார்கள் என்றதும் ரசிகர்களும் குஷியானார்கள். முதலில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது, ஆனால் மாலத்தீவில் இவர்கள் அடித்த லூட்டியை ராஷ்மிகாவே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அம்பலப்படுத்தினார்.
‘எதுக்காக போட்டோ போட்ட, டெலிட் பண்ணுன்னு’ காதலி ராஷ்மிகாவிடம் விஜய் தேவரகொண்டா கோவமாக பேசியதால், அந்தப் புகைப்படங்களை டெலிட் செய்து விட்டார். இருந்தாலும் நெட்டிசனுக்கு தீனி போட்டது மாதிரி, அந்த புகைப்படம் உடனடியாக டவுன்லோட் செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவியது.
Also Read: ரசகுல்லா நடிகையுடன் உறுதியான நிச்சயதார்த்தம்.. வெளிச்சத்திற்கு வந்த விஜய் தேவரகொண்டாவின் மன்மத லீலை
போட்டோ போட்டு தெரியப்படுத்திய ராஷ்மிகா மந்தனா
இதன் மூலம் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா இருவரும் காதலர்கள் என்பது கிசுகிசுக்கப்பட்டது உண்மைதான் என்பதை ராஷ்மிகா மந்தனா புத்திசாலித்தனமாக புகைப்படம் போட்டு வெளிப்படுத்தியதாக, திரை விமர்சகரும் பத்திரிக்கையாளருமான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடைசியாக ராஷ்மிகா மந்தனா- ரன்பீர் கபூருடன் அனிமல் படமான பான் இந்தியா படத்தில் நடித்து 850 கோடி வசூலை தட்டி தூக்கினர். இந்தப் படத்தில் ராஷ்மிகா கொஞ்சம் ஓவராகவே ரன்பீர் கபூருடன் நெருக்கம் காட்டியதால் சீக்கிரம் கால் கட்டு போட்டுடனும்னு விஜய் தேவரகொண்டா முடிவெடுத்து அடுத்த மாதம் காதலியை கரம் பிடிக்க தயாராகிவிட்டார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும்.
போட்டோ போட்டு தெரியப்படுத்திய ராஷ்மிகா மந்தனா
![_rashmika-and-vijay-devarkonda](https://tech.cinemapettai.com/wp-content/uploads/2024/01/rashmika-and-vijay-devarkonda.webp)
Also Read: 2023-இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. மார்க்கெட் இல்லனாலும் திரிஷாவை ஓரம் தள்ளிய நயன்