சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அரசியல்வாதிகளுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. சீமானுடன் வாழ்ந்து பிரச்சனை செய்த நடிகை

இந்திய சினிமாவில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் அரசியல்வாதிகளாக மாறுவதும் அரசியல்வாதிகளை காதலிப்பதும், திருமணம் செய்வதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அன்று முதல் இன்று வரை இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி 5 முக்கிய காதல் ஜோடிகள் அல்லது கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடிகள்.

சீமான்- விஜயலட்சுமி. இயக்குனராக அறிமுகமாகி அரசியல்வாதியாக மாறியவர் சீமான். ஆனால் முழுநேர அரசியல்வாதியாக இப்பொழுது மாறிவிட்டார். விஜயலட்சுமி பிரண்ட்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பெரிதாக படங்கள் எதுவும் இல்லாமல் சிறுசிறு வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தார். தெலுங்கில் படு பிசியான நடிகையாக மாறிவிட்டார். பின்னர் இருவருக்கும் 2006 முதல் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்தனர். திருமணம் செய்யாமல் பிரிந்துவிட்டனர்.

உதயநிதி- நயன்தாரா. அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி சினிமா மோகத்தால் பல திரைப்படங்களை தயாரித்தார். பின்னர் நடிக்கும் மோகத்தால் நடிக்கத் தொடங்கினார். நயன்தாரா உடன் இரண்டு படங்களில் நடித்த உதயநிதி நயன்தாராவை காதலிக்க தொடங்கினார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இது வெளியில் தெரிந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் மனைவி அதை பக்குவமாக முடித்து வைத்து விட்டார். இப்பொழுது இவர்களுக்கு எந்த பழக்கமும் இல்லை.

சுகன்யா- அதிமுக மினிஸ்டர். சுகன்யா பிராமண குடும்பத்தில் பிறந்த பெண் சினிமாவில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் ஒரு தொழிலதிபரை மணந்து விட்டு சென்று விட்டார். நடிப்பின் மீது ஆசை மறுபடியும் வந்ததால் கணவருக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின்னணியில் அதிமுக மினிஸ்டர் ஒருவர் இன்று வரை அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனால்தான் கணவனை உதறிவிட்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுகன்யா.

குட்டி ராதிகா- குமாரசாமி. நடிகை குட்டி ராதிகா தமிழ் சினிமாவில் இயற்கை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் நடித்து வந்தார். பின்னர் கன்னடம் தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி வந்தார். அதன் பின்னர் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பிரச்சினையில் ஒன்றாக வாழவில்லை. பின் கணவர் இறந்துவிட்டார். அதன் பின் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றெடுத்தார். இதில் முக்கியமாக வயது வித்தியாசம் மிகவும் அதிகம்.

எம்ஜிஆர்- ஜெயலலிதா. இந்த ஜோடி மிகவும் பரிச்சயமான வெற்றி ஜோடியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தது. இவர்கள் படங்கள் ஒன்றாக நடித்தனர். ஜெயலலிதாவுக்காக எம்ஜிஆர் எது வேணாலும் செய்யுமளவிற்கு விரும்பினார். ஜெயலலிதா எம்ஜிஆரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். பின்னர் ஜெயலலிதா வேறு நடிகர்களுடன் நடித்தார், எம்ஜிஆரும் வேறு நடிகையுடன் நடிக்க தொடங்கினார். சில வருடம் பிரிவுக்கு பின்னால் ஒன்று சேர்ந்து அரசியலில் இன்று வரை இவர்களை அசைக்க முடியாத அளவுக்கு பெயரைப் பெற்றனர்.

Trending News