Revathi net worth: நடிகை ரேவதி தமிழ் சினிமாவின் ஒரு மிகப்பெரிய அடையாளம். நடிப்பை மட்டுமே நம்பிக்கையாக கொண்டு சினிமாவில் களம் இறங்கி வெற்றி பெற்ற நடிகைகளின் லிஸ்டில் எப்போதுமே ரேவதிக்கு இடம் உண்டு.
ஹீரோயின், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், டப்பிங் ஆர்டிஸ்ட் என ரேவதைக்கு பல பரிமாணங்கள் உண்டு. இப்போது உங்கள் ரேவதி என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அவருடைய 6 கதாபாத்திரங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மண் வாசனை: ரேவதியை அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாரதிராஜா தான். முதல் படத்தின் முத்து பேச்சி கேரக்டர் கிராமத்து மக்களின் மனதில் அவரை உட்கார வைத்தது. அது மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் ரேவதிக்கு கிடைத்தது. ஒரே படத்தில் ரொம்பவும் சுட்டி பெண்ணாகவும், இடைவேளைக்குப் பிறகு அதற்கு எதிர் மாறாக சீரியஸாகவும் நடித்திருப்பார்.
அரங்கேற்ற வேளை: ரேவதி நடித்த சிறந்த கேரக்டர்களில் அரங்கேற்ற வேளை மாஷா கேரக்டருக்கு எப்போதுமே இடம் உண்டு. சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியாவை விட இந்த மாஷா பத்து மடங்கு பின்னி படலெடுத்து இருப்பார். வி கே ராமசாமி, பிரபு, ரேவதி கூட்டணியில் இந்த படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்கலாம்.
மௌன ராகம்: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதில் ரேவதி திவ்யா கேரக்டரில் நடித்திருப்பார். துரு துருவன ஒரு கேரக்டர், கார்த்திக் மீதான காதல், மோகன் மீதான வெறுப்பு, திருமணத்திற்கு பிறகு வரும் காதல் வந்த பிறகும் மீண்டும் அதே துருதுருவென இருக்கும் கேரக்டர் என ஒரே படத்தில் பல பரிணாமங்களில் வாழ்ந்து காட்டு இருப்பார்.
புதுமை பெண்: மீண்டும் மண்வாசனை கூட்டணியில் உருவான படம் தான் புதுமைப்பெண். இதில் ரேவதி சீதா எனும் கேரக்டரில் நடித்து இருப்பார். கணவனுக்காக எதையும் செய்யக்கூடிய காதல் நிறைந்த மனைவியாகவும், அதே நேரத்தில் கணவன் மீது வைத்திருக்கும் அன்புக்கு எந்த மரியாதையும் இல்லை என தெரிந்ததும் சீறி எழும் சிங்கமாகவும் கர்ஜித்து இருப்பார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரேவதி பேசும் வசனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
வைதேகி காத்திருந்தாள்: வைதேகி காத்திருந்தாள் படத்தின் வைதேகி கேரக்டர் ரேவதிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. படம் முழுக்க வெள்ளைப் புடவையுடன் வரும் ரேவதி அழகு மலராட பாட்டு பரதநாட்டியத்தில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார். படத்தில் ரேவதிக்கு அவ்வப்போது ஒன்றிரண்டு வசனங்கள் தான் இருக்கும். இருந்தாலும் இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.
கிழக்கு வாசல்: கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான படம் தான் கிழக்கு வாசல். இந்த படத்திற்குப் பிறகு ரேவதிக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அவர் ஏற்று நடித்த தாயம்மா கேரக்டர் இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்ததற்காக ரேவதிக்கு தேசிய விருது கிடைத்தது.
இத்தனை நாளாக சேர்த்த சொத்து!
நடிகை ரேவதி இன்று அவருடைய 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு 40 முதல் 50 கோடி ஆகும். ரேவதிக்கு கேரளாவில் நான்கு கோடி மதிப்பில் பெரிய வீடு இருக்கிறது. அதேபோன்று சென்னையில் 5 கோடி மதிப்பில் ஹைடெக் வசதியுடன் ஒரு வீடு இருக்கிறது. மீண்டும் லட்சக்கணக்கில் மதிப்பிலான இரண்டு சொகுசு கார்களும் அவருக்கு உள்ளது.