பல கோடிகளில் சம்பளம் வாங்கி, பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் இந்த நடிகை, தன்னுடைய முதல் படத்திற்கு 10 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடிக்கும் நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்ளில் நடித்தவர் ஜெயபிரதா. குறிப்பாக, 1970-80 காலகட்டங்களில் தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஹிட் அடித்த நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் இடம்பெற்றவர். கடைசியாக கமல் நடித்த தசாவதாரம் படத்திலும் ஒரு கேமியோ ரோல் செய்திருந்தார்.
சர்கம், ஊரிக்கி மொனகாடு, கம்சோர், கவிரத்ன காளிதாசா, சம்சாரம் போன்ற படங்கள் இவர் நடித்த சிறந்த படங்களாக உள்ளன. 300 படங்களுக்கு மேல் நடித்த இவர் தொடக்கத்தில் நடிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர் மருத்துவராக வேண்டும் என்றே விரும்பி உள்ளார்.
30 ஆண்டுகளாக, நடிகைகள் ஜெயபிரதா மற்றும் ஸ்ரீதேவிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. maqsad திரைபடத்தில் ஜெயபிரதா மற்றும் ஸ்ரீதேவி திரையில் ஒன்றாக தோன்றினாலும், வெளியே இருவரும் பேசிக்கொள்வதை தவிர்த்ததாக கூறப்பட்டது. என்னதான் முன்னணி நடிகையாக இவர் வளம் வந்தாலும், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
குறிப்பாக இவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தபோது, இங்கு உள்ள தமிழக மக்கள் அவரை விமர்சனம் செய்தார்கள். மேலும் தனது தியேட்டர் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தாத குற்றத்திற்காக நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதகால சிறைத் தண்டனையையம் விதித்திருந்தது நீதிமன்றம்.
இவர் பாலிவுட்டில் பெரும் பங்களிப்பை கொடுத்தவர். இப்பேற்பட்ட இவர், முதல் முத்லாக பூமி கோசம் என்ற படத்தில் 10 ரூபாய் சம்பளத்திற்கு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.