புதன்கிழமை, ஜனவரி 15, 2025

HBD Sai Pallavi: சைலண்டா டாப் ஹீரோக்களுடன் கமிட் ஆன ரௌடி பேபி.. 32 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா!

Sai Pallavi: சாய் பல்லவி என்ற பெயரை கேட்டாலே சினிமா ரசிகர்களின் வயிற்றில் பட்டாம்பூச்சி தான் பறக்கும். அந்த அளவுக்கு மலர் என்னும் கேரக்டர் மூலம் ரசிகர்களை கொள்ளையடித்து விட்டார். காட்டன் புடவை, கலைந்த கூந்தல், அலட்டல் இல்லாத அழகு என்று முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சில் சிக்கென அமர்ந்து விட்டார்.

சினிமா நடிகைகள் ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் முகம் பளபளப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக எவ்வளவோ மெனக்கெடுவார்கள். ஆனால் சாய் பல்லவி முகம் முழுக்க செக்கச் சிவந்த முகப்பருக்களை வைத்துக் கொண்டே அசால்ட் ஆக ஒரு படம் முழுக்க நடித்து முடித்து இருப்பார்.

மலர் கேரக்டர் என்று இல்லை இயல்பாகவே சாய் பல்லவி இப்படி ஒரு குணாதிசயம் கொண்டவர் தான். எவ்வளவு பெரிய விழாவாக இருக்கட்டும் ஒரு காட்டன் புடவை கட்டிக்கொண்டு அசால்ட் ஆக பங்கேற்க அவரால்தான் முடியும்.

டாக்டருக்கு படித்த பெண், டான்ஸ் மீது ஆர்வம், தாம் தூம் படத்தில் 2,3 சீன்களில் தலையை காட்டி இருப்பார். மார்க்கெட் இருக்கும்பொழுது கிடைக்கும் கதைகளில் எல்லாம் நடித்து பணம் சம்பாதித்து விடுவோம் என்ற எண்ணம் எல்லாம் சாய்பல்லவிக்கு கிடையாது.

பொறுமையாக நல்ல கதையை தேர்ந்தெடுப்பது தான் அவருடைய வெற்றிக்கு பெரிய காரணம். ரெண்டு, மூன்று படங்கள் ஹிட் ஆனாலே விளம்பரத்தில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள் நடிகைகள். ஆனால் சாய்பல்லவி மட்டும் எந்த ஒரு அழகு சாதன விளம்பரத்திலும் நடித்து மக்களை தவறான வழியில் கொண்டு செல்ல மாட்டேன் உறுதியாக இருப்பது ஆச்சரியம் தான்.

கொஞ்சம் கூட ஆடம்பரமே இல்லாத அழகி தன்னுடைய முப்பத்தி இரண்டாவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். நடிகர்கள் தங்களுக்கு பிடித்தமான இந்த நடிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் கார்க்கி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சாய் பல்லவி அடுத்தடுத்து சைலன்டாக மூன்று டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

அதேபோன்று இயக்குனர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ஹாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து ராமாயணம் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சீதாதேவி கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் இணைந்து தண்டல் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படம் கடல் கடந்து சிறையில் சிக்கிக் கொள்ளும் மீனவர்களின் வாழ்க்கை கதையை மயமாகக் கொண்டு எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடிகை சாய் பல்லவி நீலகிரி மாவட்டத்தில் பிறந்தவர். அதனால் தான் என்னவோ, இயற்கையான அழகு அவருடன் ஒட்டிக்கொண்டது.

32 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா!

சாய்பல்லவிக்கு 32 வயதாகிறது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அதை தாண்டி 32 வயதில் சாய்பல்லவி சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு தான் இன்னும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவிக்கு 45 லிருந்து 50 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கிறது.

அதேபோன்று ஆரம்பத்தில் 60 இருந்து 70 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். சமீபத்தில் இவருடைய சம்பளம் 4 கோடியாக இருந்தது. முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தற்போது ஆறு கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

மேலும் சாய் பல்லவி இடம் Audi q3 என்னும் விலை உயர்ந்த கார் இருக்கிறது. இதை தவிர்த்து இரண்டு, மூன்று சொகுசு கார்கள் இவருக்கு இருக்கிறது. கோவை மற்றும் கோத்தகிரியில் சாய் பல்லவிக்கு சொந்தமான . சொகுசு பங்களா இருக்கிறது மேலும் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிறைய தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

Trending News