Actress Samantha latest photos: நடிகை சமந்தா மலேசியாவில் இருந்து நடுக்காட்டில் உல்லாச குளியல் போடும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளசுகளை திணறடித்துள்ளார். இந்த போட்டோஸை பார்த்ததும் மீண்டும் சமந்தா ரீ என்ட்ரி கொடுக்கப் போவது என்பது உறுதியாகிவிட்டது.
ஏனென்றால் விவாகரத்திற்கு பிறகு சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோயால் ரொம்பவே அவதிப்பட்டார். இந்தியாவில் சிகிச்சை எடுத்தாலும் அது பயனளிக்காததால் அமெரிக்காவிற்கு சென்றும் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.
மலேசியாவில் வெக்கேஷனை என்ஜாய் செய்த சமந்தா

அதோடு அவர் அந்த நோயுடன் போராடிக் கொண்டிருந்த சமயத்திலும், ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் ஃப்ளாப் ஆனது. இதனால் சினிமாவில் இருந்து சில காலம் பிரேக் எடுத்துக்கொண்டு மனதையும் உடம்பையும் தயார் செய்ய சமந்தா முடிவெடுத்தார்.
பிரைவேட் நீர்வீழ்ச்சியில் உல்லாச குளியல் போட்ட சமந்தா

மலேசியாவில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்
தற்போது சிகிச்சையை எல்லாம் முடித்துவிட்டு, மலேசியாவில் வெக்கேஷனை என்ஜாய் செய்து வருகிறார். அங்கிருக்கும் ஒரு பிரைவேட் நீர்வீழ்ச்சியில் நீச்சல் உடையில் உல்லாச குளியல் போட்டு என்ஜாய் செய்து வரும் புகைப்படங்களை சமந்தா தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவுகிறது.
ரிசார்ட்டில் அமைதியாக தியானம் செய்யும் சமந்தா

நடு காட்டில் ஸ்விம்மிங் செய்தது மட்டுமல்லாமல், அவர் தங்கி இருக்கும் ரிசார்ட்டில் அமைதியாக தியானம் செய்யும் புகைப்படத்தையும், அந்த பகுதியில் உள்ள அழகிய காட்சிகளின் புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார். இந்த போட்டோஸை எல்லாம் சமந்தாவின் ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் ஆக்கிக்கொண்டிருக்கின்றனர்.