புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முதல் முதலில் கருப்பு அழகியாக ஜெயித்துக் காட்டிய சரிதாவின் 6 படங்கள்.. ரஜினியை ஓடவிட்ட ஒரே ஹீரோயின்

நடிகை சரிதா இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களால் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டார். அவரின் இயக்கத்திலேயே இவர் 22 படங்களில் நடித்திருக்கிறார். மொத்தம் சரிதா கதாநாயகியாக 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சரிதா பின்னணி குரல் கொடுப்பவர் ஆகவும் இருக்கிறார். சரிதாவின் நடிப்பில் இந்த ஆறு படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

நெற்றிக்கண்: இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தில் பெண் பித்து பிடித்து திரியும் சக்கரவர்த்தி என்னும் கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினிகாந்தின் கொட்டத்தை அடக்கும் பெண்ணாக சரிதா நடித்திருப்பார். இந்த படம் ரஜினிக்கு மட்டுமில்லாமல் சரிதாவுக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

Also Read:ஹீரோயின் ஆசை காட்டி ஐட்டம் டான்ஸ் ஆட வைத்த இயக்குனர்.. அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பைப் பிடித்த நடிகை

மௌன கீதங்கள்: சரிதா தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்த திரைப்படம் மௌன கீதங்கள். பாக்யராஜின் யதார்த்தமான கதைகளத்தில், சரிதாவின் இயல்பான நடிப்பு இந்த படத்தை பெண் ரசிகைகள் கொண்டாடும் விதமாக அமைந்தது. ஒப்பனை, முக வசீகரம் என ஹீரோயின்கள் இருந்த காலத்தில் ஒரு சாதாரண புடவை, எந்த ஒப்பனையும் இல்லாத முகம் என தன்னுடைய நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி சரிதா ஜெயித்த திரைப்படம் இது.

தப்பு தாளங்கள்: 70 களின் காலகட்டத்தில் இப்படி ஒரு கதையில் நடிப்பதற்கே பெண்களுக்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். விலைமாதுவாக இருக்கும் சரிதாவை விரும்பி மணந்து கொள்ளும் ரஜினிகாந்த், திருமண வாழ்க்கைக்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை மற்றும் சமூகத்தில் இவர்கள் சந்திக்கும் அவலங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

கீழ்வானம் சிவக்கும்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் கீழ்வானம் சிவக்கும். தமிழ் திரைப்படங்களில் எத்தனையோ உறவுகளை கொண்டாடும் விதமாக கதைகள் வந்திருந்தாலும், ஒரு மாமனார் மற்றும் மருமகளுக்கு இடையே இருக்கும் அன்பான உறவை பற்றி அழகாக எடுத்துச் சொன்ன திரைப்படம் இது. சரிதா இந்த படத்தில் நடிகர் திலகத்துடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.

Also Read:ஆசை காட்டி மோசம் செய்த கணவன்.. வயிற்றுப் பிழைப்புக்காக அந்தரங்க தொழில் செய்த அவலம்

அச்சமில்லை அச்சமில்லை: இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ராஜேஷ் மற்றும் சரிதா நடித்த திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. அரசியலின் கபட தன்மையை பாலச்சந்தர் இந்த படத்தில் ரொம்பவும் வெளிப்படையாக சொல்லி இருப்பார். இதில் சரிதா நடித்த காட்சிகளை பார்க்கும் பொழுது இன்றளவும் மெய்சிலிர்த்து விடும். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பில் நெருப்பை காட்டி இருப்பார் நடிகை சரிதா.

கல்யாண அகதிகள்: இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களும் விரும்பி பார்க்கும் படம் என்றால் அது சரிதா நடிப்பில் வெளியான கல்யாண அகதிகள் தான். திருமணத்தை வெறுக்கும் பெண்கள், திருமணத்தால் வாழ்வை இழந்த பெண்கள் என அத்தனை பேரின் உணர்வையும் ஒரே படத்தில் காட்டி இருப்பார் பாலச்சந்தர். இதில் காதலித்த காதலனை திருமணம் செய்ய காத்திருக்கும் சரிதாவின் ஏமாற்றம், அதன் பின்னர் அவர் எடுக்க முடிவு போன்றவற்றை பாலச்சந்தர் மிகச் சிறப்பாக காட்டியிருப்பார்.

Also Read:நடிகை மீது பைத்தியமாக இருந்த ஹீரோ.. சுயரூபத்தை காட்ட அப்பா செய்த மட்டமான வேலை

Trending News