திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஷகிலா கேட்ட கேள்வியில் கதறிய கவர்ச்சி புயல்.. தெரிஞ்சுதான் காட்டுறேன்னு இதுல பெருமை வேற

நடிகை ஷகிலா 80 மற்றும் 90களின் காலகட்டத்தில் கவர்ச்சி நடிகை ஆக இருந்தவர். அதன் பின்னர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் பல யூடியூப் சேனல்களிலும் இவர் பேட்டி கொடுப்பதோடு, இவரே ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருக்கிறார். மேலும் பல பிரபலங்களை பேட்டி எடுத்து அவர்களின் மறுபக்கத்தையும் வெளிக்கொண்டு வருகிறார்.

இதேபோன்று ஒரு பிரபல யூடியூப் சேனலுக்காக டிக் டாக் புகழ் இலக்கியாவை ஷகிலா இன்டர்வியூ எடுத்து இருக்கிறார். ஷகிலாவை பொறுத்த வரைக்கும் மற்றவர்களைப் போல சிரித்து மழுப்பாமல் ரொம்பவும் நேர்மையாகவும் கராறாகவும் கேள்விகளை கேட்க கூடியவர். அப்படித்தான் இலக்கியாவும் ஷகிலாவிடம் சிக்கியிருக்கிறார்.

Also Read: 90களின் ஆம்பளை ஷகிலா இந்த ஹீரோதான்.. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க முடியாத 5 படங்கள்

அந்த பேட்டியில் பேசிய இலக்கியா தான் சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதாகவும், அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியே சென்று வேலை தேடியதாகவும், கோயம்புத்தூரில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே அவருக்கு துபாயில் நடனமாட வாய்ப்பு கிடைத்து அங்கே சென்று சம்பாதித்ததாகவும், பின்னர் சென்னை திரும்பிய பிறகு தான் இந்த டிக் டாக்கில் வீடியோ போட ஆரம்பித்ததாகவும் கூறி இருந்தார்.

நடிகை ஷகிலா, இலக்கியாவிடம் நீங்கள் ரொம்ப அதிகமாகவே கவர்ச்சி காட்டுகிறீர்கள் அது உங்களுக்கு தப்பாக தெரியவில்லையா என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன இலக்கியா, தான் முதலில் ஒழுங்காக வீடியோ பண்ணும் பொழுது அந்த அளவுக்கு லைக்ஸ் வரவில்லை என்றும், எப்போது தாராளமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தேனோ அப்போதுதான் எனக்கு நிறைய லைக்ஸ்சும், புகழும் வந்தது என்று ரொம்பவும் வெளிப்படையாகவே பதில் சொன்னார்.

Also Read: மிருகங்களை விட்டு கொடூரமா ரே*** பண்ணனும்.. ஷகிலாவுக்கு அதிர்ச்சி பதிலடி கொடுத்த வனிதா

நீங்கள் கவர்ச்சியாக ஆடும் வீடியோக்களுக்கு லைக்ஸ் கிடைப்பது உங்களுக்கு ஒரு வித போதையை தருகின்றதா என்று ஷகிலா கேட்ட பொழுது, இலக்கியா தன்னுடைய வீடியோக்களுக்கு லைக்ஸ் வருவது தனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுப்பதாகவும், இதற்காகவே தேடித்தேடி கிளாமர் அதிகம் உள்ள பாட்டுகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வீடியோ பண்ணுவதாகவும் தனக்கு இது பிடித்திருப்பதாகவும் கூறினார்.

நடிகை ஷகிலாவை பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலங்களில் தன்னுடைய கவர்ச்சியை வைத்து சம்பாதித்தாலும் அதன் பின்னர் தனக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கவில்லையே தான் தனியாக இருக்கிறோமே என்று பலமுறை வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக நிறைய நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார். கண்ணுக்கு முன்னாலேயே சிறந்த உதாரணம் இருக்கும்பொழுது, இலக்கியா கிளாமர் தனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்வது ரொம்பவும் அபத்தமாகவே இருக்கிறது.

Also Read: கேவலமான வேலை செய்து மாட்டிய 6 நடிகைகள்.. ஷகிலாவிற்கு இணையாக வந்த பிரபல நடிகை

Trending News