வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இளம் வயதில் தமிழில் ஷகிலா கலக்கிய 4 படங்கள்.. வயதுக்கு வராமல் கவுண்டமணியை பரிதவிக்க விட்ட கவர்ச்சி புயல்

நடிகை ஷகிலா ப்ளே கேர்ள்ஸ் என்னும் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். மலையாள சினிமா உலகில் இவர் கவர்ச்சி நடிகை ஆக நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் தன்னுடைய இளம் வயதில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார்.

மறுமலர்ச்சி: 1998 ஆம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மறுமலர்ச்சி. இந்தப் படம் நடிகர் மம்முட்டி நடித்த நேரடி தமிழ் படமாகும். மறுமலர்ச்சி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சின்ன கலைவாணர் விவேக் நடித்திருப்பார். அவருடைய மனைவியாக ஷகிலா நடித்திருந்தார்.

Also Read: சரமாரியாக விட்டு விளாசிய ஷகிலா.. விஷத்தை கக்க முடியாமல் பல்லு புடுங்கிய பாம்பான பயில்வான்

ஜல்லிக்கட்டு காளை: பிரபு மற்றும் கனகா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு காளை. இந்தத் திரைப்படத்தில் வரும் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. கவுண்டமணி, செந்தில், கருப்பு சுப்பையா, ஷகிலா கூட்டணியில் வரும் ‘இனி நீ வயசுக்கு வந்தா என்ன’ என்ற காமெடி காட்சி இன்று வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு சீன் ஆகும்.

பொண்ணு விளையுற பூமி: 1998 ஆம் ஆண்டு ராஜ்கிரண், குஷ்பூ, வினிதா நடிப்பில் வெளியான திரைப்படம் பொண்ணு விளையுற பூமி. இந்த படம் ராஜ்கிரனுக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. நடிகை ஷகிலாவும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

Also Read: ஷகிலா கேட்ட கேள்வியில் கதறிய கவர்ச்சி புயல்.. தெரிஞ்சுதான் காட்டுறேன்னு இதுல பெருமை வேற

உதவிக்கு வரலாமா: நவரச நாயகன் கார்த்திக் மற்றும் நடிகை தேவயானி நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் உதவிக்கு வரலாமா. இந்த படத்தில் ஜனகராஜ், வடிவுக்கரசி, மணிவண்ணன், கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். ஷகிலா இந்த படத்தில் கவர்ச்சி நடிகை ஆக நடித்திருந்தார்.

நடிகை ஷகிலா மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தூள், ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன், அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்தார். ஷகிலா பங்கேற்ற ‘குக் வித் கோமாளி’ என்னும் சமையல் போட்டி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

Also Read: மிருகங்களை விட்டு கொடூரமா ரே*** பண்ணனும்.. ஷகிலாவுக்கு அதிர்ச்சி பதிலடி கொடுத்த வனிதா

 

Trending News