வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்தி பிக்பாசை கலக்கிய ஸ்ருதிகா, நடிச்ச படம் மொத்தமும் பிளாப்.. அப்புறம் எப்படி இத்தனை கோடிக்கு சொத்து!

Shrutika Arjun: பொதுவாக ஆண்களுக்கு தெளிவாக இருக்கும் பெண்களை விட, ஹாசினி மாதிரி பெண்களை தான் அதிகம் பிடிக்கும் போல.

அந்த லிஸ்டில் ஒருத்தர் தான் ஸ்ருதிகா அர்ஜுன். அவருடைய குழந்தைத்தனமான பேச்சுக்காகவே அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

உண்மையை சொல்லப்போனால் சினிமாவில் இருந்ததைவிட இப்போதுதான் இவருக்கு நல்ல மார்க்கெட்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இத்தனை நாட்கள் இவர் உள்ளே இருந்ததே பெரிய விஷயம் தான்.

டாப் லிஸ்டில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்.

அப்புறம் எப்படி இத்தனை கோடிக்கு சொத்து!

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகியது பலருக்கும் ஏமாற்றம்தான். அதே நேரத்தில் ஸ்ருதிகா அர்ஜுனின் சொத்து விவரம் வெளியாகி நம்மை இன்னும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

ஸ்ருதிகா பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் தமிழில் சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடிக்கும் போது இவருக்கு 15 வயது தான்.

இதை தொடர்ந்து நள தமயந்தி மற்றும் ஆல்பம் படங்களில் நடித்தார். அதன் பின்னர் தொழிலதிபர் அர்ஜுன் ராஜை திருமணம் செய்து கொண்டார்.

2003 க்கு பிறகு ஸ்ருதிகா மீடியாவில் தலை காட்டவில்லை. மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீடியாவுக்கு வந்தார்.

இவர் சொந்தமாக ஆயுர்வேதிக் ப்ராடக்டுகள் தயாரித்து விற்கிறார். மேலும் இவருக்கு துணிக்கடையும் இருக்கிறது.

பிக் பாஸில் ஒரு வாரத்திற்கு மூன்று லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். மேலும் ஸ்ருதிகா விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவருக்கு சொந்தமாக யூடியூப் சேனலும் இருக்கிறது. சமீபத்திய தகவலின் படி ஸ்ருதிகாவுக்கு மொத்தம் 42 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன.

Trending News