ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இடையழகிக்கு ஹாப்பி பர்த்டே.. நடன சூறாவளி சிம்ரனின் மொத்த சொத்து மதிப்பு

Actress Simran: இப்பொழுது நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடுகின்றனர். ஆனால் உண்மையில் சிம்ரனுக்கு தான் இந்த பட்டம் வெகுவாக பொருந்தும்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் இவர் புகுந்து விளையாடி விடுவார். ஹீரோயின் ஆக மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லியாக கூட இவர் கலக்கியிருக்கிறார்.

அவ்வளவு ஏன் எஸ் ஜே சூர்யாவுடன் இவர் நடித்த நியூ பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அப்படிப்பட்ட கேரக்டரில் இமேஜ் பார்க்காமல் நடிக்க இவரால் மட்டுமே முடியும்.

அதேபோல் விஜய்க்கே டப் கொடுக்கும் வகையில் நடன சூறாவளியாக இவர் கலக்கி இருக்கிறார். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரியான இந்த இடையழகி இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சிம்ரனின் சொத்து மதிப்பு

அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு பற்றி காண்போம். அதன்படி 90களில் பிற்பகுதியில் நடிக்க ஆரம்பித்த இவர் இப்போதும் பிஸியாக தான் இருக்கிறார்.

அந்த வகையில் இவருக்கு 80 கோடி வரை சொத்துக்கள் இருக்கின்றன. அதில் மும்பையில் இவருக்கு ஆடம்பர பங்களா இருக்கிறது.

அதேபோல் சென்னை கோயம்புத்தூரிலும் சொகுசு வீடு மற்றும் பண்ணை வீடு இருக்கிறது. மேலும் பிஎம் டபிள்யு, ஆடி போன்ற லேட்டஸ்ட் மாடல் கார்களும் உள்ளன.

அது மட்டுமின்றி விலைமதிப்புள்ள தங்க வைர நகைகளும் இருக்கிறது. இத்துடன் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலமும் வருமானம் வருகிறது.

இப்படியாக பல கோடிகளுக்கு அதிபதியாக இவர் இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சிம்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trending News