வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நாயோட எதுக்கு வம்பு பிரபலத்தை கிழித்தெறிந்த கஸ்தூரி.. நெருப்பில்லாமல் புகையாது மேடம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது யூடியூப் சேனல் மூலம் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். திரைப்படங்களை நடிப்பதைக் காட்டிலும் தற்போது தான் இவர் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களை பற்றி இவ்வாறு அவதூறாக பேசுவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பல பிரபலங்களும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அப்போதும் இதை நிறுத்தாமல் தொடர்ந்து தன் வேலையை செய்து கொண்டு வருகிறார் பயில்வான்.

அண்மையில் நடிகை ராதிகாவின் அம்மாவைப் பற்றி பயில்வான் தரக்குறைவாக பேசியுள்ளார். எதர்ச்சியாக திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதனை பார்த்த ராதிகா அவரை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டு உள்ளார். பின்பு அங்கு உள்ளவர்கள் இவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது பயில்வான் ரங்கநாதன் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் என பல பத்திரிகை விமர்சகர்களை ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்து ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில், பீ** மிதிக்கக் கூடாது என்று தள்ளி நடக்கின்றோம், அது அருவருப்பு, பயமில்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பார்த்தேன். இந்த முழுப் பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையும் கூட தப்பா பேசுவான் என பதிவிட்டிருந்தார்.

Kasthuri
Kasthuri

Trending News