வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிரிப்பழகி சினேகாவை டேட்டிங் செய்த 4 ஹீரோக்கள்.. உதடு கடி பிரச்சனையால் மண்ணைக் கவ்விய தரமான படம்

Actress Sneha Dating History: என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சினேகா தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். சிரிப்பழகி சினேகா என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட இவர், சினிமாவில் டாப் ஹீரோயின் ஆக இருந்த 2000 ஆம் ஆண்டுகளில் அவர் டேட்டிங் செய்த நான்கு ஹீரோக்களை பற்றி பார்ப்போம்.

பிரசாந்த்: ஆயுதம், விரும்புகிறேன் போன்ற படங்களில் பிரசாந்துக்கு கதாநாயகியாக சினேகா நடித்தார். இந்த படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இதனால் திரை மறைவிலும் இவர்களது காதல் தொடர்ந்து, சில நாட்கள் சினேகா- பிரசாந்த் இருவரும் டேட்டிங் செய்தனர் என்று கிசுகிசுக்கப்பட்டது. பின்பு இருவருக்கும் ஒத்து வராமல் பிரிந்து விட்டனர் .

Also Read: ஒரே வருடத்தில் அறிமுகமாகி கல்யாணத்தால் காணாமல் போன 5 நடிகைகள்.. 20 வருஷமா சொல்லியடிக்கும் திரிஷா!

மாதவன்: 2000 ஆம் ஆண்டுகளில் என்னவளே, பார்த்தாலே பரவசம்  போன்ற படங்களில் செம ஹோம்லி லுக்கில் சினேகா மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்களில் இவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டு டேட்டிங் செய்தார் என்று சோசியல் மீடியாவில் பயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு போகாமல் பிரேக் அப் ஆனது.

ஷாம்: நடிகர் சாம் மற்றும் சினேகா இருவரும் ஜோடி சேர்ந்த படம் தான் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’. வித்தியாசமான காதல் கதை கொண்ட இந்த படத்தில் ஷாம் சினேகாவின் உதடை கடித்துவிட்டார் என்று பிரச்சனை  கிளம்பியது. இதனாலேயே தரமான படமான இந்த படத்தின் வசூல் பயங்கரமாக அடி வாங்கி படம் ஊத்திக் கொண்டது.

Also Read: இரட்டை வேடத்தில் நடித்த 6 ஹீரோயின்கள்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த நயன், சமந்தா

அப்பாஸ்: ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், அது போன்ற படங்களில் சினேகா மற்றும் அப்பாஸ் இருவரும் சேர்ந்து நடித்தனர். அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்பந்தம் படத்தில் இளம் காதலர்களாக  சினேகா மற்றும் அப்பாஸ் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள்  இடையே இந்த படத்திற்குப் பிறகு நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்து, டேட்டிங் செய்தனர் என்று சமூக வலைதளங்களில் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் ஒத்து வராமல் சீக்கிரமே பிரிந்து விட்டனர்.

இவ்வாறு சர்ச்சைக்கு பெயர் போன சினேகா, இந்த நான்கு நடிகர்களுடன் காதல் என்ற பெயரில் டேட்டிங் செய்து பின் கழட்டிவிட்டார் என்று கிசுகிசுக்கப்பட்டது. கடைசியில் நடிகர் பிரசன்னாவை இப்போது காதல் திருமணம் செய்து கொண்டு, குடும்பம் குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. சாதனை படைத்த சுயம்வரத்தில் இத்தனை பேரா

Trending News