வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரே படத்தில் கேரக்டரை டேமேஜ் பண்ணிய தனுஷ்

பொதுவாக சினிமாவில் சேர்ந்து நடிக்கும் நடிகர் நடிகைகளை வைத்து கிசுகிசுக்கள் வருவது என்பது இயல்பான ஒன்றுதான். சில கிசுகிசுக்கள் அப்படியே உண்மை என்று நம்பும்படியும் இருக்கும். சில வதந்திகளாகவே போய்விடும். தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா, ஆண்கள் மட்டுமில்லாமல் பெண் ரசிகைகளுக்கும் அதிகமாக பிடித்தவர். இதற்கு காரணம் இவருடைய குடும்பப்பாங்கான கேரக்டர்கள் தான். அப்படிப்பட்ட சினேகா கூட இந்த 6 நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ்: ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக இருந்து, தற்போது பட இயக்குனராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார். சினேகா லாரன்ஸ் உடன் இணைந்து பாண்டி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்து திரைப்படத்திற்கு பிறகு இருவரும் கொஞ்சம் அதிகமாகவே கிசுகிசுக்கப்பட்டனர். மேலும் இந்த படத்தில் வரும் மாசி மாசம் ஆளான பொண்ணு பாடல் காட்சிகளும் கொஞ்சம் ஓவர் நெருக்கமாகவே இருக்கும்.

Also Read:பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!. பட்டப் பகலில் இயக்குனர் செய்த காரியம்

பிரசாந்த்: நடிகர் பிரசாந்த்தை பிடிக்காத நடிகைகளே தமிழ் சினிமாவில் இல்லை என்று சொல்லலாம். நடிகைகளுக்கு பிடித்த சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்துடன் இணைந்து சினேகா விரும்புகிறேன் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதுதான் அவருடைய முதல் படமும் கூட. இதன்பின்னர் சில வருடங்கள் இவர் பிரசாந்துடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

அப்பாஸ்: சினேகா மற்றும் அப்பாஸ், ஆனந்தம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் பம்மல் கே சம்பந்தம் மற்றும் அது போன்ற படங்களில் தொடர்ந்து நடித்திருக்கின்றனர். அன்றைய காலகட்டத்தில் நடிகர் அப்பாசும் தமிழ் சினிமாரசிகைகளிடையே சாக்லேட் பாயாக வலம் வந்தார். இவருடனும் சினேகா கிசுகிசுக்கப்பட்டிருக்கிறார்.

Also Read:பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

மாதவன்: தமிழ் சினிமா ரசிகர்களின் ஆணழகனாக இன்று வரை இருப்பவர் நடிகர் மாதவன். சினேகா மாதவனுடன் இணைந்து என்னவளே மற்றும் பார்த்தாலே பரவசம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்ததின் காரணமாக இவர்கள் இருவரும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டனர்.

தனுஷ்: நடிகை சினேகா குடும்பப்பாங்கான ஹீரோயின் ஆக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவுக்கு இடையேயான காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும் இந்த படத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டனர்.

ஸ்ரீகாந்த்: நடிகை சினேகா, ஸ்ரீகாந்த் உடன் இணைந்து தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூட செய்திகள் வெளியாகின. இருவரும் காதலித்து அது திருமணம் வரை சென்று பிறகு அந்த உறவு முறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிகமாக கிசுகிசுக்கப்பட்டது ஸ்ரீகாந்த் உடன் தான்.

Also Read:திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

Trending News