Sneha net worth: தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகிகள் வந்தாலும் அதில் ஒரு சிலர் தான் பக்கத்து வீட்டுப் பெண் போல் பரீட்சையமாகி விடுவார்கள். அதில் முக்கியமான ஒருவர்தான் புன்னகை அரசி சினேகா. எந்த மேக்கப்பும் இல்லாமல், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளாமல் இன்று வரை கொள்ளை அழகுடன் இருக்கிறார்.
சமீபத்தில் ரிலீசான தளபதி விஜய் நடித்த கோன் படத்தில் கூட சினேகா நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரஷாந்துடன் இணைந்து விரும்புகிறேன் படத்தில் நடித்திருந்தாலும் சினேகாவுக்கு முதலில் ரிலீஸ் ஆன படம் என்னவளே தான்.
சினேகா சேர்த்த மொத்த சொத்து மதிப்பு
அதன்பின்னர் சினேகாவின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தம். அதை தொடர்ந்து அஜித், விஜய், கமலஹாசன் என டாப் ஹீரோக்கள் பலருடனும் சேர்ந்து நடித்து விட்டார். சினேகா திரைப்படத்திற்கு வந்து ஒன்று இரண்டு வருடங்களிலேயே அவருக்கு கிடைத்த சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் தான் மக்களிடையே அவரை அதிகமாக கொண்டு சேர்த்தது.
சரவணா ஸ்டோர் என்றாலே அது சினேகா தான் என்று ஆகிவிட்டது. தினமும் ஒரு 100 முறை அழகான பட்டுப் புடவை கட்டிக்கொண்டு சரவணா ஸ்டோரில் துணி எடுங்கள் என சினேகா கொடுக்கும் விளம்பரம்தான் அப்போதைய ட்ரென்ட்.
திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டார் சினேகா. அதன் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். மேலும் சினேகாவுக்கு விளம்பர வாய்ப்புகளும் எக்கச்சக்கமாக கிடைக்கின்றன.
சினிமாவை தாண்டி நடிகை சினேகா ரியல் எஸ்டேட் பிசினஸிலும், இன்டீரியர் பிசினஸிலும் முதலீடு செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சினேகாலயா என்னும் புடவை கடையையும் திறந்து இருக்கிறார். சினேகாவுக்கு 40 முதல் 50 கோடி சொத்து மதிப்பு இருக்கிறது ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளமாக பெறுகிறார்.