சிரிப்பழகி சினேகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.. புளியங்கொம்பை புடிச்ச அதிர்ஷ்டசாலி பிரசன்னா

Actress Sneha Net Worth: 2000ஆம் ஆண்டுகளில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த புன்னகை அரசி சினேகா, இன்று அவரது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல சமூக வலைதளங்களில் இவரைக் குறித்த சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகிறது.

அதிலும் இவருடைய ஒட்டுமொத்த சொத்து விவரம் எவ்வளவு என்பது வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இப்பதான் தெரியுது எதுக்கு தன்னைவிட ஒரு வயது அதிகம் உள்ள சினேகாவை பிரசன்னா திருமணம் செய்து கொண்டார் என்று. சினேகாவின் சொத்து சுகத்தை பார்த்துதான் பிரசன்னா விழுந்துவிட்டார். இவர் புடிச்சாலும் புளியங்கொம்பை புடிச்ச அதிர்ஷ்டசாலி தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் முன்பு கதாநாயகியாகவும் இப்போது குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் சினேகாவின் பிளஸ் பாயிண்ட் அவருடைய ஹோம்லி லுக் தான். இவர் சினிமாவில் நடித்து மொத்தமாக 80 கோடி சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தை பெற்ற பின்பு ஒரு சில வருடங்கள் மட்டுமே பிரேக் எடுத்துக்கொண்டு, மறுபடியும் நடிக்க வந்துவிட்டார். வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பங்கேற்கிறார்.

இந்த வாய்ப்பு கூட பிரசன்னாவிற்கு இப்போது கிடைப்பதில்லை. அவர் மட்டும் சினேகாவுடன் இணைந்து சம்பாதித்து இருந்தால் இந்த சொத்து மதிப்பு இன்னமும் கூடியிருக்கும். சினேகா சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல தொழில்களில் முதலீடு செய்வதால் வருமானமும் பிச்சுக்கிட்டு வருது.

அதுமட்டுமல்ல வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இதில் தந்தையாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா ஒப்பந்தமாக இருக்கிறார். இவ்வாறு சினிமாவில் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு சிரிப்பழகி சினேகா வெறித்தனமாக சம்பாதித்து வருகிறார்.