Sunaina: சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் மெஹந்தி கொண்டாட்டம், ரிசப்ஷன் என அனைத்தும் கலை கட்டியது.
அதையடுத்து ரொம்பவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணத்தை சரத்குமார் நடத்துகிறார். வரலட்சுமியின் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்திருக்கிறது. இவரை போலவே நடிகை சுனைனாவும் விவாகரத்து பெற்ற ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
அதன்படி சில வாரங்களுக்கு முன்பு இவர் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை ஒரு போட்டோவுடன் அறிவித்தார். ஆனால் அதில் மாப்பிள்ளை யார் என்பதை அவர் வெளியிடவில்லை. இருவரின் கைகளிலும் மோதிரம் இருக்கும் போட்டோவை தான் ஷேர் செய்திருந்தார்.
யூடியூபரை திருமணம் செய்யும் சுனைனா
அதனாலேயே சுனைனாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். அதன்படி தற்போது அவர் துபாய் பிரபல யூட்யூபரான காலித் அல் அமெரி என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் தன் மனைவியை விவாகரத்து செய்தார். அந்த வகையில் காலித் அல் அமெரி, சுனைனா இருவரின் திருமணமும் இந்த வருட இறுதியில் நடக்கும் என கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகைகள் எல்லாம் எதற்காக ஏற்கனவே திருமணம் ஆனவரை தேடி போய் கல்யாணம் செய்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
ஏனென்றால் வரலட்சுமிக்கு முன்பாக நடிகை ஹன்சிகாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒருவரை தான் மணமுடித்தார். அந்த வரிசையில் தற்போது சுனைனாவும் இணைந்து இருக்கிறார்.
திருமணத்திற்கு தயாராகும் நடிகைகள்
- வைரலாகும் கோமளவல்லியின் புகைப்படங்கள்
- குடும்பத்தோடு மோடியை சந்தித்த சரத்குமார்
- நாங்க டெய்லி உழைச்சா தான் சம்பளம் ஆக்ரோஷமான வரலட்சுமி