வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சினிமாவில் நடக்கும் கேவலமான செயல்கள்.. புட்டு புட்டு வைத்த தமன்னா!

தென்னிந்திய சினிமாவின் டாப் கதாநாயகியாக இருந்த தமன்னா கடைசியாக விஷாலுடன் ஆக்சன் என்ற படத்தில் நடித்த பிறகு பட வாய்ப்பு குறைந்ததால், கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் தமன்னா சமீபத்தில் பேட்டியில் சினிமாவில் நடக்கும் தரமற்ற செயலை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். இதில், யாரும் பெண்களை சீரியஸாய் எடுத்துக்கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் ஏதாவது கருத்து கூறினால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

மேலும் அது சரியா என இன்னொரு முறை என்னையே யோசிக்க வைத்து விடுகிறார்கள். பெண்களுக்கு சினிமாத்துறையில் மதிப்பு இருப்பதில்லை என கூறியுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு காதலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன்.

ஆனால் தற்போது தனக்கு பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது. அப்போது விட இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என கூறியுள்ளார். மேலும் ஹீரோக்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள்.

ஆனால் ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. மேலும் தயாரிப்பாளரிடம் இருந்து சம்பளத்தை கூட வாங்கி விடலாம். ஆனால் அங்கீகாரம் மட்டும் யாருக்கும் கிடைப்பதில்லை. ஒரு ஹீரோ, அவர்கள் நடித்த பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் கதாநாயகி மட்டும் பட புரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்றால், எனக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என செய்தி வரும் எனக் கூறினார். தற்போது இரண்டு பான் இந்தியா படங்களில் நடித்தும், அந்த போஸ்டரில் என்னுடைய புகைப்படம் இதுவரை இடம்பெறவில்லை எனவும் தமன்னா காட்டமாக தெரிவித்துள்ளார்.

Trending News