புது பாய் பிரண்டுடன் உல்லாசமாக சுற்றும் பிரபல நடிகை.. குழந்தையை அம்போவென தவிக்கவிட்ட பரிதாபம்

தமிழில் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை கிறங்கடித்தவர் அந்த வெள்ளைக்கார நடிகை. அறிமுகப் படத்திலேயே ஆஹா ஓஹோ என புகழப்பட்ட அவர் அதன்பிறகு பெரிய பெரிய நடிகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் படு பிசியாக நடித்து வந்த நடிகை சில காலங்களில் சினிமாவை விட்டே காணாமல் போனார். பட வாய்ப்புகள் குவிந்த போதிலும் அதை எல்லாம் உதறித் தள்ளிய நடிகை தன் காதலருடன் பொழுதை போக்கி வந்தார்.

அதன் விளைவாக திருமணம் செய்து கொள்ளாமலே கர்ப்பம் அடைந்த நடிகை அதை மகிழ்ச்சியாக தன் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தினார். அதன்பிறகு காதலரை ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை திருமணம் நடப்பதற்கு முன்பே குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இதனால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் நடிகை குழந்தையை கவனிப்பதில் அதிக மும்முரமாக இருந்தார். மேலும் குழந்தையுடன் அவர் நேரம் செலவிடும் அனைத்து போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

இப்போது குழந்தை சற்றே வளர்ந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு எடுத்த நடிகை தற்போது தன் பணக்கார காதலனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். நடிகை மீண்டும் சினிமாவுக்கு செல்ல முடிவு எடுத்ததுதான் அவர்களின் பிரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மகனுடன் தாய் வீட்டில் வசித்து வரும் நடிகை தற்போது மற்றொரு பணக்கார காதலரை பிடித்துள்ளாராம். சதா சர்வகாலமும் அவர் தன் புது காதலனுடன் தான் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இதனால் குழந்தை அம்மாவை காணாத ஏக்கத்தில் தவித்து வருகிறதாம்.

நடிகையின் தற்போதைய பாய்பிரெண்ட் அவருக்கு சினிமா வாய்ப்பு வாங்கி கொடுத்து வருகிறாராம் அதனால்தான் நடிகை அவருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருவதாக திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா என்று பலரும் நடிகையை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்