என்னதான் பெயர், புகழ், பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் நிம்மதி என்பது ரொம்ப முக்கியம். இது சினிமா பிரபலங்களுக்கு அப்படியே பொருந்தும். வெளியில் சந்தோசமாக காட்டிக் கொண்டாலும் பல நட்சத்திரங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.
அப்படித்தான் பிரபல நடிகை ஒருவரும் இப்போது உச்சகட்ட மன அழுத்தத்தில் இருக்கிறாராம். சிறிது சிறிதாக முன்னேறி இன்று புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் அந்த நடிகை. அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கும் இவர் சமீப காலமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
Also read: 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்
தொடர்ச்சியாக இவருடைய படங்கள் சறுக்கல்களை சந்தித்து வரும் நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவர் பல பிரச்சினைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார். அதிலும் நம்பியவர்களாலேயே இவருக்கு நடந்த நம்பிக்கை துரோகம் இவரை முழுவதுமாக உடைய வைத்திருக்கிறிருக்கிறது.
இதை பல இடங்களில் சூசகமாக நடிகை வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் துவண்டு போய் விடக்கூடாது என்பதற்காக தற்போது தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வரும் இவர் சோகத்தை மறைப்பதற்காகவே தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறாராம். இருந்தாலும் அவருடைய மன அழுத்தம் குறைவதாக இல்லையாம். அதன் காரணமாகவே நடிகை சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.
Also read: அந்தரங்க உறவை புதுப்பிக்க வந்த நடிகை.. எஸ்கேப்பான விவாகரத்து நடிகர், அப்செட்டில் நடிகை செய்த சம்பவம்
ஆனால் சுற்றி இருப்பவர்களால் எப்படியோ காப்பாற்றப்பட்ட அவர் தற்போது அந்த எண்ணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறாராம். எப்படி இருந்த நடிகை இப்படி சோர்ந்து போய் விட்டாரே என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு வருத்தப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் நடிகை அதிக மன திடம் உள்ளவர் என்பதால் எப்படியும் இதை சமாளித்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கிறார்களாம்.