புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குடும்ப சொத்து மதிப்பை தாக்கல் செய்த ஜெயா பச்சன்.. ஆடிப்போன தேர்தல் ஆணையம்

Amitabh Bachan net worth: நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முக்கிய தலைவர்கள் பலரும் தங்களுடைய வேட்பு மனுவை அவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் தாக்கல் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகையும், அரசியல்வாதியும் ஆன ஜெயா பச்சன் செவ்வாய்க்கிழமை வே டு மனு தாக்கல் செய்திருக்கிறார். இதில் இவர் குறிப்பிட்டு இருக்கும் குடும்ப சொத்து மதிப்பு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியினருக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா என்ற இரு பிள்ளைகள் இருப்பது எல்லோருக்குமே தெரியும். திருமணத்திற்கு பிறகு 17 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயா பச்சன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அவருக்கு அரசியல் வாய்ப்பு அமைந்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி சார்பாக எம் பி எலெக்ஷனில் நின்று, வெற்றியும் பெற்றார். அதைத்தொடர்ந்து ஜெயா பச்சன் நான்கு தேர்தல்களில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக ஜெயித்து இருக்கிறார். அரசியலில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது இவருடைய வழக்கம்.

Also Read:இந்த 5 பாடல்கள் லதா ரஜினிகாந்த் பாடியதா!. பின்னணிப் பாடகியாக கலக்கிய சூப்பர் ஸ்டாரின் மனைவி

இந்த வருட மக்களவைத் தேர்தலிலும் எம்பி எலெக்ஷனில் போட்டியிடுகிறார் சூப்பர் ஸ்டாரின் மனைவி ஜெயா பச்சன். இதற்காக கடந்த 13ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் நிற்கும் ஒவ்வொருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது தங்களுடைய உண்மையான சொத்து மதிப்பை அதில் குறிப்பிட வேண்டும், பின்னர் ஆணையத்தின் சார்பில் அந்த தனிப்பட்ட நபரின் சொத்து மதிப்பு சரிபார்க்கப்படும். அந்த வகையில் ஜெயா பச்சனும் தன்னுடைய குடும்ப சொத்து மதிப்பை தாக்கல் செய்திருக்கிறார்.

ஆடிப்போன தேர்தல் ஆணையம்

ஜெயா பச்சன் குறிப்பிட்டு இருக்கும் வேட்பு மனுவில் ஜெயா மற்றும் அமிதாப்பச்சன் இருவருடைய சொத்து மதிப்போம் 1578 கோடி என்று சொல்லி இருக்கிறார். இதில் ஜெயா பச்சனுக்கு, 10.11 கோடி வங்கி கணக்கில் இருக்கிறது.40.97 கோடி மதிப்பில் தங்க நகைகள் சொந்தமாக இருக்கின்றன. மேலும் 10 லட்சம் மதிப்பிலான சொகுசு காரும் ஜெயா பச்சனுக்கு சொந்தமாக இருக்கிறது.

ஜெயா பச்சனின் கணவர், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனின் வங்கி கணக்கில் 120 கோடி இருக்கிறது. 54.77 கோடிக்கு மதிக்கத்தக்க நகைகள் அவருக்கு சொந்தமாக இருக்கின்றன. மேலும் அமிதாப்பச்சனுக்கு சொந்தமாக 16 விலை உயர்ந்த சொகுசு கார்களும் இருப்பதாக அந்த வேட்பு மனு தாக்கல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அமிதாப்பச்சன் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:நேத்து வந்த பையன் கிட்ட தோத்துப்போன ரஜினி.. வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செஞ்ச மகள்

 

 

 

Trending News